[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

குருவின் உடலைச் சுமந்து சென்று சச்சின் கண்ணீருடன் அஞ்சலி

tearful-sachin-tendulkar-attends-coach-ramakant-achrekars-funeral

தனக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுத்த ஆசானான ரமாகாந்த் அச்ரேகரின் இறுதி ஊர்வலத்தில், அவரது உடலைச் சுமந்து சென்று கண்ணீருடன் விடை கொடுத்தார் சச்சின் டெண்டுல்கர்.

உலகக் கிரிக்கெட்டின் ஈடு இணையற்ற கிரிக்கெட் ஜாம்பவனாக அறியப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் அவர் செய்யாத சாதனைகளே இல்லை. அந்தச் சாதனைகளை முறியடிக்கவே இப்போதுள்ள இளம் வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டுக்கொண்டு விளையாடி வருகின்றனர். ஆனால் இத்தனை சாதனைகள் படைத்த சச்சினுக்கு கிரிக்கெட் விளையாட கற்றுக் கொடுத்தவர் அவரது ஆசான் ரமாகாந்த் அச்ரேகர். 87 வயதான அச்ரேகர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார்.

இவர், இளம் வயதில் சச்சினுக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுத்ததுடன் தனது இரு சக்கர வாகனத்திலேயே பல இடங்களுக்கு அழைத்துச் சென்று போட்டிகளில் பங்கேற்க வைத்தவர். மற்றொரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளிக்கும் அச்ரேகர் பயிற்சியளித்திருக்கிறார். இதனிடையே நேற்று மரணமடைந்த அச்ரேகரின் உடல் அவர் பயிற்சியளித்து வந்த மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

சச்சின், காம்ப்ளி உள்ளிட்ட ஏராளமான கிரிக்கெட் வீரர்களும், ராஜ் தாக்கரே போன்ற அரசியல்வாதிகளும், பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அருகில் உள்ள மின் மயானத்தில் அச்ரேகரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தின் போது சச்சின் தனது கிரிக்கெட் ஆசானான அச்ரேகரின் உடலை சுமந்து கண்ணீருடன் விடை கொடுத்தார். தகனத்தின்போது காம்ப்ளி உள்ளிட்டோரும் கண்ணீருடன் தங்களது குருவுக்கு விடைகொடுத்தனர்.

முன்னதாக தன் ஆதர்சன குரு இறந்த பின்பு ட்விட்டரில் நெகிழ்ச்சியாக நினைவு கூர்ந்திருந்தார் சச்சின். அதில் " அச்ரேகர் சாரின் வருகையால் சொர்க்கத்தில் கிரிக்கெட் வளம் பெறப்போகிறது. என் கிரிக்கெட் வாழ்க்கையின் ஏபிசிடிக்களை அவர்தான் கற்றுக்கொடுத்தார். அவருடைய நிறைய மாணவர்களைப் போல் நானும் அவருடைய வழிகாட்டுதலின் படியே கிரிக்கெட்டின் பயின்றேன். எனது வாழ்க்கையில், அவருடைய பங்களிப்பை வார்த்தையால் அடக்கமுடியாது. அவர் கட்டமைத்த அடித்தளத்தில் தான் நான் நிற்கின்றேன். கடந்த மாதம் கூட அவரை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தேன். சார் எனக்கு நீங்கள் நேராக எப்படி விளையாடுவது எப்படி என கிரிக்கெட்டில் மட்டும் கற்றுக்கொடுக்கவில்லை, வாழ்கையிலும்தான்" என பகிர்ந்திருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close