[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

என் எண்ணத்தைப் பொய்யாக்கிவிட்டார் பும்ரா: கபில்தேவ்

bumrah-has-proved-me-wrong-kapil-dev

'பும்ரா பற்றி நான் முதலில் கொண்டிருந்த எண்ணம் தவறாகிவிட்டது’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. குறுகிய ஓவர் போட்டிகளில் கலக்கிய பும்ரா, பின்னர் டெஸ்ட் போட்டிகளில் சேர்க்கப்பட்டார். அவரது பந்துவீச்சு ஆக்‌ஷன் வித்தியாசமானது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் அவரது ஆக்‌ஷனை கிண்டலடித்தனர். ஆனால், அவர்களுக்கு தனது பந்துவீச்சு திறமையால் பதிலடி கொடுத்தார் பும்ரா.

இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது, இந்திய அணி. இந்த போட்டிகளில் பும்ரா சிறப்பாக பந்துவீசி விக்கெட் வீழ்த்தி வருகிறார். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற அவரது பந்துவீச்சும் காரணம். அவர் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.

இந்த மைதானத்தில் 37 வருடங்களுக்கு முன் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. அப்போது இந்திய அணியின் சார்பில், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தியிருந்தார் கபில்தேவ். அவர், இப்போது பும்ராவை புகழ்ந்துள்ளார். இவர் ஏற்கனவே, பும்ராவின் பந்துவீச்சு ஆக்‌ஷனை ஏற்கவில்லை. இவர் ஸ்டைலே வேறு மாதிரி இருக்கிறதே...இவர் எப்படி பந்து வீசப் போகிறார் என்று நினைப்பதாகக் கூயிருந்தார். 

இந்நிலையில் தனது நினைப்பை பும்ரா பொய்யாக்கிவிட்டார் என்று தெரிவித்துள்ளார் கபில்தேவ். 

‘’சர்வதேச போட்டிகளில் பும்ரா, சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுவருகிறார். முதன்முறையாக அவரை நான் பார்த்தபோது, இவர் நீண்ட நாள் அணியில் நீடிப்பாரா என்று நினைத்தேன். அதை பொய்யாக்கிவிட்டார். ஆஸ்திரேலியாவில் அவரது பந்துவீச்சு சிறப்பானதாக இருந்தது. அவரை பாராட்டுகிறேன். அவரது மனநிலை வலிமையானதாக இருக்கிறது. அவரிடம் சிறப்பு தோள்கள் இருக்கின்றன.

இதுபோன்ற பந்துவீச்சாளர்கள் தனித்துவமானவர்கள். அவர் புதிய மற்றும் பழைய பந்தில் சிறப்பாக வீசுகிறார். எங்கு வீச வேண்டும் என்பதை சரியாக கணித்து வீசுகிறார். எதிரணிக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் பவுன்சரையும் அருமையாக வீசுகிறார். மனநிலை முக்கியம். இதெல்லாம் சேர்ந்துதான் அவரை முக்கியமான பந்துவீச்சாளராக மாற்றியிருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close