[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

“இந்த பிட்ச் ரொம்ப மோசம்” - 319 பந்துகளை சந்தித்த புஜாரா பளீச்

india-vs-australia-on-different-track-i-could-have-scored-140-150-says-cheteshwar-pujara

வேறு மைதானமாக இருந்திருந்தால் 150 ரன்கள் வரை எடுத்திருப்பேன் என்று இந்திய அணியின் சடேஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. புஜாரா 68, கோலி 47 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன் எடுத்துள்ளது. 

        

மெல்போர்ன் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு ரன் குவிக்க மிகவும் மந்தமாக உள்ளது. இரண்டு நாட்களிலும் சராசரியாக 220 ரன்களே எடுக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா மட்டுமே சற்றே வேகமாக விளையாடி 114 பந்தில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் விராட் கோலி கூட 204 பந்துகளை சந்தித்து 82 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய புஜாரா 319 பந்துகளை சந்தித்து 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

          

இந்நிலையில், மைதானம் குறித்து புஜாரா விரிவாக பேசியுள்ளார். “விக்கெட் வீழ்வதை பொறுத்தும், சூழ்நிலை பொறுத்துமே பேட்டிங் செய்வோம். இந்த மைதானத்தில் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் ரன்களை சேர்க்க அதிக பந்துகளை சந்திக்க வேண்டி இருக்கும். வேறுவொரு மைதானமாக இருந்தால் இத்தனை பந்துகளை சந்தித்ததற்கு 140-150 ரன்கள் எடுத்திருப்பேன். டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை சூழ்நிலையும், மைதானத்தையும் கணிப்பதுதான் முக்கியம். 

             

இன்றைய தினத்தை பொறுத்தவரை, ஆடுகளம் மிகவும் மோசமடைய தொடங்கிவிட்டது. தாருமாறாக பந்து பவுண்சர் ஆகிறது. நேற்றும், இன்றும் பேட்டிங் செய்த போது, மிகவும் வித்தியாசமாக உணர்ந்தேன். நாளை முதல் மேலும் ஆடுகளம் மோசமாகும் என்று நினைக்கிறேன். எங்களது வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். எங்களிடம் போதுமான ரன்கள் உள்ளது” என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close