[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

7 வயது சிறுவன் விராட் கோலியை வீழ்த்தப் போவதாக சூளுரை !

seven-year-old-archie-schiller-will-co-captain-australia-in-the-iconic-boxing-day-test

இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளராக 7 வயது சிறுவன் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.

Image result for Archie Schiller

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.  தொடர் 1-1 என்று சமநிலையை எட்டியுள்ளதால், மெல்போர்னில் வரும் 26 ஆம் தேதி தொடங்கும் 3 வது டெஸ்ட் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related image

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுதினம் நடைபெறும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள் என அழைக்கப்படுகிறது. பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள் சர்வதேச அளவில் முக்கியத்துவத்தையும் பெறுகின்றன. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் உள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஆர்ச்சி ஷில்லர் என்ற 7 வயதே ஆன லெக் ஸ்பின்னர் 15 ஆவது வீரராக இடம் பிடித்துள்ளார். இதனை மெல்பர்னில் உள்ள YARRA பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அணிக் கேப்டன் டிம் பெய்ன் உறுதிசெய்தார்.

Image result for Archie Schiller

ஆர்ச்சி ஷில்லர் அணியில் சேர்க்கப்பட்டதில் நெகிழ்ச்சியான பின்னணி உள்ளது. பிறக்கும் போதே இதய பாதிப்பு இருந்த ஆர்ச்சி ஷில்லருக்கு 13 முறை அறுவை சிகிக்சைகள் நடந்துள்ளன. அவருக்கு எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், ஆர்ச்சி ஷில்லர் கிரிக்கெட்டின் மீது தீராத மோகத்துடன் இருந்து வருகிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆவதே லட்சியம் என தெரிவித்து வரும் ஆர்ச்சி ஷில்லருக்கு இணைக் கேப்டன் அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட்டில் களமிறங்க வாய்ப்பு கிட்டினால், விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தப் போவதாக ஆர்ச்சி ஷில்லர் சூளுரைத்துள்ளார். கிரிக்கெட் கனவுகளுடன் இருக்கும் சிறுவன் ஆர்ச்சி, ஆஸ்திரேலியா அணி வீரர்களுடன் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது கேப்டன் ஆசையை நிறைவேற்றும் வகையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள போட்டிக்கான டாஸ் போடுவதுடன், தேசிய கீத நிகழ்விலும் ஆர்ச்சி ஆஸ்திரேலியாவின் இணை கேப்டனாக பங்கேற்கவுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close