[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.14 கோடி: பாகிஸ்தானுக்கு ஐசிசி உத்தரவு

pcb-to-pay-nearly-usd-2-million-to-bcci

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.14 கோடியை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. 

பயங்கரவாத பிரச்னை காரணமாக பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் தொடர் நடத்துவதை நிறுத்திவிட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் பங்கேற்று ஆடி வருகின்றன. 

இந்நிலையில் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தந்தத்தி ன்படி, இரு தரப்பு தொடரை நடத்த இந்தியா மறுத்துவிட்டது. இதனால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்காக இந்திய கிரிக்கெட் வாரியம், 63 மில்லியன் டாலர் (சுமார் ரூ.446 கோடி) வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தீர்ப்பாயத்தில் புகார் கூறியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. 

(பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எஹசன் மணி)

இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம், இந்த வழக்குக்காக தாங்கள் செலவழித்த தொகையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தது. இதையடுத்து, ‘இந்திய கிரிக்கெட் வாரியம் செலவழித்த தொகை யில் 60 சதவிகிதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலுத்தவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கிய குழுவின் செலவுத் தொகையையும் சேர்த்து கொடுக்க வேண்டும்’’ என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த தொகை 2 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 14 கோடி) என்று கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close