[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

விராத் கோலி- டிம் பெய்ன் மோதிக்கொண்டது ஏன்?

umpire-steps-in-as-banter-all-but-turns-into-fracas

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலிக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கும் நடந்த மோதல், நடுவரின் எச்சரிக்கையால் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலிய வீரர்கள் மற்ற அணி வீரர்களை கேலி, கிண்டல் செய்வதில் வல்லவர்கள். பந்தை சேதப்படுத்திய விவகாரத் துக்குப் பிறகு இந்த கிண்டல், கேலி கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி யில் மீண்டும் தங்கள் வேலையை காட்டத் தொடங்கிவிட்டனர்.

பெர்த்தில் நடைபெறும் இந்தப் போட்டியின் 3-வது நாளில் பும்ரா வீசிய பந்து, டிம் பெய்னின் பேட்டை உரசியது போல் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் கையில் தஞ்சம் அடைந்தது. உடனே விராத் கோலி அவுட் கேட்டார். நடுவர் வழங்கவில்லை. அப்போது விராத்- டிம் பெய்ன் இடையே வாக்குவாதம் நடந்தது. அது நான்காவது நாளான நேற்றும் தொடர்ந்தது. 

71-வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது பெய்னின் அருகில் பீல்டர்களை நிறுத்தினார் விராத். உடனே டிம் பெய்ன், விராத் திடம் ஏதோ சொல்ல, இருவருக்கும் வார்த்தை மோதல் மீண்டும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் நேருக்கு நேர் நெருங்கியபடி நின்று கொண்டு மோதலில் ஈடுபட்டனர். அவர்கள் பேசிக்கொண்டது ஸ்டம்பில் பொருத்தப்பட்டி ருந்த மைக்கில் தெளிவாகக் கேட்டது. ’’நீங்கள்தான் நேற்று பொறுமை இல்லாமல் பேசினீர்கள். இன்று அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்’’ என்றார் பெய்ன்.

இதைக் கண்ட நடுவர் கிறிஸ் கஃபானே தலையிட்டு ‘’போதும். விளையாடுங்கள்’’ என்றார். உடனே, ’’நாங்கள் சும்மா பேசி கொண்டுதான் இருக்கிறோம். சண்டையிடவில்லை’’ என்றார் பெய்ன். பின்னர், ‘’நீங்கள் கேப்டன். மறந்துவிடாதீர்கள்’’ என்றார் நடுவர். பின்னர் விராத் கோலி ஏதோ சொல்லிக்கொண்டே சென்றார். லெக் அம்பயர் தர்மசேனா, அவரை எச்சரித் தார். இதனால் மைதானத்தில் பரபரப்பு நிலவியது.

இதுபற்றி ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹசல்வுட் கூறும்போது, ‘’இப்படி மோதலில் ஈடுபடுவது ஆரோக்யமான போட்டியை உருவாக்கும். இந்திய வீரர்கள் என்ன தோன்றுகிறதோ, அதை செய்யட்டும். நாங்கள் கட்டுப்பாடுடன் இருக்கி றோம்’’ என்றார். 

முன்னாள் சஞ்சய் மஞ்சரேக்கர் வர்ணனையில் கூறும்போது, "விராத் கோலி தனது கோபத்தை குறைத்துக்கொண்டு விளையாடுவது அவசியம்" என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close