[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

“உலகின் மோசமான கிரிக்கெட் வீரர் விராட் கோலி” - நடிகர் நசீருதின் சாடல்

naseeruddin-shah-calls-virat-kohli-world-s-worst-behaved-player

உலகின் மோசமான நடத்தை கொண்ட கிரிக்கெட் வீரர் என்று இந்தியக் கேப்டன் விராட் கோலியை நடிகர் நசீருதின் ஷா சாடியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்து, பல சாதனைகளை படைத்து வருகிறார். இருப்பினும், அவ்வப்போது சர்ச்சையில் சிக்க தவறவில்லை. குறிப்பாக அவரது கோபம் தான் அவருக்கு முதல் எதிரியாக உள்ளது. இதே ஆண்டில், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் இந்திய அணி விளையாடிய போது, செய்தியாளர்களிடம் கோலி சற்று கடினமாக பேசியிருந்தார். அது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து அண்மையில், இந்திய வீரர்களின் பேட்டிங்கை விட வெளிநாட்டு வீரர்கள் பேட்டிங்கை ரசிப்பதாக ஒரு கிரிக்கெட் ரசிகர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். பிறந்த நாள் அதுவுமாக அந்த ட்வீட்டை கண்ட கோலி, இந்திய பேட்ஸ்மேன்களின் விளையாட்டை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என கோபமாக தெரிவித்திருந்தார். அதற்கு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பியது. இதையடுத்து விளக்கமளித்த கோலி தான் அந்த கருத்தை எதிர்க்கவில்லை என்றும், இந்திய பேட்ஸ்மேன்களை இழிவுபடுத்தியதை மட்டுமே தான் எதிர்த்ததாகவும் தெரிவித்தார். இவ்வாறாக கோலிக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகரும், இயக்குநருமான நசீருதின் ஷா, விராட் கோலியை விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “விராட் கோலி உலகின் சிந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல. அவர் உலகின் மோசமான நடத்தைக்கொண்ட வீரரும் ஆவார். கோலியின் திறமையான கிரிக்கெட் என்பது அவரது அகந்தை மற்றும் கெட்ட நடத்தைகளால் மங்குகின்றது. அத்துடன் எனக்கு நாட்டை விட்டு வெளியேறும் எந்த எண்ணமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என சாடியுள்ளார். இவரது இந்த கருத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கோலி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் பலர் ஆதரவாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

முன்னதாக, பெர்த் நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கேப்டன் திம் பெய்னேவுக்கும் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. நான்காவது நாளான இன்று மூன்றாவது செஷனில் பெய்னே, முகமது ஷமி பந்துவீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close