[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா!

australia-v-india-2nd-test-ausee-collopse-after-steady-start

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 1.30 மணி வரை 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன் சேர்த்து ஆடி வருகிறது. 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. 

2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது. போட்டி நடக்கும் ஆப்டஸ் மைதானம் புதிதாகக் கட்டப்பட்டது. இங்கு நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இது. ஆஸ்திரேலியாவின் 10-வது டெஸ்ட் மைதானமான இதன் பிட்ச், வேகமானதாகவும் பந்து பவுன்ஸ் ஆகும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணியில் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியில் ரோகித் சர்மா, அஸ்வினுக்குப் பதிலாக விஹாரியும் உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டனர். 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச்சும் ஹாரிஸும் களமிறங்கினர். இருவரும் அடித்து ஆடினார். நிலையா ன ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் பின்ச் அரைச்சதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 112 ஆக இருந்தபோது பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து அவர் வெளியேறினார். அடுத்து உஸ்மான் கவாஜா வந்தார். அவர் 5 ரன் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷான் மார்ஷும் ஹாரிஸும் நன்றாக ஆடிக் கொண்டிருந்தனர். ஹாரிஸ் அபாரமாக ஆடி அரைசதத்தை தாண்டினார். அவர் 70 ரன் எடுத்திருந்த நிலையில் விஹாரி வீசிய பந்தில் துணை கேப்டன் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

நூறு ரன்கள் வரை நிலையாக இருந்த அந்த அணி, அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஹேண்ட்ஸ்கோம்ப் வந்தார். அவரு ம் வந்த வேகத்திலேயே இஷாந்த் சர்மா பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 7 ரன் சேர்த்திருந்தார். பின்னர் வந்த  டிராவிஸ் ஹெட்டும் மார்ஷூம் மெதுவான ஆட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் 1.30 மணியளவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத் திருந்தது. மார்ஷ் 23 ரன்னுடனும் ஹெட் 14 ரன்னுடன் களத்தில் இருக்கின்றனர். 

இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா, பும்ரா, உமேஷ் யாதவ், விஹாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close