[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

அசாருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? ஸ்ரீசாந்த் கேள்வி!

if-azhar-is-allowed-to-return-why-not-me-sreesanth-to-sc

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? என்று வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது புகார் எழுந்தது. இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் ஆகிய வீரர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவில் 2015 ஆம் ஆண்டு ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இதையடுத்து தனது வாழ்நாள் தடையை நீக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த நீதிமன்றம் தடையை நீக்க மறுத்துவிட்டது. பின்னர் அவர் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதி, தடையை ரத்து செய்தார். இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை தொடரும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் அப்பீல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நேற்று வந்தது. 

அப்போது ஸ்ரீசாந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சல்மான் குர்ஷித், ‘ஸ்ரீசாந்துக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடை அதிகப்படியானது. அவருக்கு இப்போது 36 வயது. அவரால் இனி உள்ளூர் போட்டிகளில் கூட விளையாட முடியாது. இப்போது, இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அவரை அதில் ஆட அனுமதிக்கவில்லை என்றால் அந்த வாய்ப்பும் பறிபோகும். அதனால் இடைக்கால தடையாவது விதித்து அவரை விளையாட அனுமதிக்க வேண்டும்’ என்றார். 

அவர் மேலும் கூறும்போது, ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதினுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடை விடுவிக்கப்பட்டது. அவரை ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கிறது. ஆனால் ஸ்ரீசாந்துக்கு மட்டும் அனுமதி மறுப்பது என்ன நியாயம் என்றும் அவர் கேட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை யை ஜனவரி மூன்றாவது வாரத்துக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close