[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

மீண்டும் வெடித்தது, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பனிப்போர்!

harmanpreet-mandhana-urge-bcci-to-keep-powar-as-coach

 இந்திய மகளிர் கிரிக்கெட்டின், ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் மிதாலி ராஜ். அனுபவ வீராங்கனையான இவர், சமீபத்தில் வெஸ்ட் இண்டீ ஸில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றார். முதல் இரண்டு போட்டியில் அரைசதம் அடித்திருந்த அவரை, முக்கியமான அரையிறுதி போட்டியில் அணியில் சேர்க்காமல் உட்கார வைத்தனர். அந்தப் போட்டியில் இந்திய அணி தோற்று, தொடரில் இருந்து வெளி யேறியது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மிதாலிராஜின் மானேஜர், இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டார். ’டி20 அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், சூழ்சிக்காரர், பொய் சொல்கிறார், கேப்டன் பதவிக்கு தகுதி இல்லாதவர்’ என்று கூறியிருந்தார்.

 இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம், மிதாலி ராஜ், பயிற்சியாளர் ரமேஷ் பவார், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி யது. அதில், தனது புகழை ரமேஷ் பவார் முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார் என்றும் தன்னை அவமானப்படுத்தினார் என்றும் கூறியிருந் தார் மிதாலி.ரமேஷ் பவார், ‘பேட்டிங் வரிசையை மாற்றினால் கிரிக்கெட்டு முழுக்கு போடுவேன்’ என்று மிதாலி ராஜ் மிரட்டியதாக புகார் தெரிவித்தார்.


இதையடுத்து இந்த விவகாரம் பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது.

 இதற்கிடையே, பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவி காலம் கடந்த 30 ஆம் தேதியோடு முடிந்துவிட்டது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்ததாகவும் மிதாலியுடனான பிரச்னை காரணமாக கடும் அதிருப்திக்குள்ளான வாரியம், அவர் பதவியை நீட்டிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் ரமேஷ் பவாரை 2021-ம் ஆண்டு வரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று டி20 அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் மந்தனா ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ‘பவார், இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர். அவரது செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவரே பயிற்சியாளராக தொடர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் அவருக்கு பயிற்சியாளர் பதவி வழங்கக்கூடாது என்று கிரிக்கெட் வீராங்கனைகள் எக்தா பிஸ்ட், மான்சி ஜோஷி ஆகியோர் குரல் எழுப்பியுள்ளனர். இதன் மூலம் இந்திய மகளிரில் கிரிக்கெட் அணியில் இரு கோஷ்டி இருப்பதும் கடும் அரசியல் நிலவுவதும் மீண்டும் தெரிய வந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close