[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும்; அரசியலில் எதுவும் நடக்கலாம் - துணை முதல்வர் ஓபிஎஸ்
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

’அந்த வருத்தத்தில் இருந்து மீண்டு விட்டேன்’: தவான்

was-a-bit-sad-but-moved-on-shikhar-dhawan-on-test-omission

டெஸ்ட் அணியில் இடம்பெறாதது வருத்தத்தைக் கொடுத்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் கலக்கும் இவர், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, தடுமாறி வருகிறார். இங்கிலாந்து தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தொடரில் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக களம் இறங்கிய இளம் வீரர் பிருத்வி ஷா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தவானுக்கு இடம் கிடைக்கவில்லை. டி20 தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற அவர், ’டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்காதது தனக்கு மன வருத்தத்தை தந்தது’ என்று கூறியுள்ளார். 

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ‘’டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டது கொஞ்சம் வருத்தத்தைக் கொடுத்தது. ஆனால், அதில் இருந்து மீண்டு விட்டேன். தற்போது தெளிவான மனநிலையில் நேர்மறையான சிந்தனையோடு உள்ளேன்.

இப்போது கிடைத்துள்ள ஓய்வை எனக்கான பயிற்சிக்காகவும் பிடன்ஸூக்காகவும் பயன்படுத்திக் கொள்கிறேன். இதனால் எனக்கு மகிழ்ச்சி தான். இந்த டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத் தினால் கண்டிப்பாக டெஸ்ட் தொடரை வெல்வோம்.

உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் ஆறு மாதம் மட்டுமே உள்ளது. அதற்காக அதிக கவனம் செலுத்தி வருகிறேன். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் நான் சிறப்பாகவே ஆடியிருக்கிறேன். அதனால் அங்கு நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் என்னால் அதிக ரன் குவிக்க முடியும்’’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close