[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

கேட்ச், ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டதால் தோற்றோம்: தவான்

dhawan-laments-missed-opportunities-on-the-field

கேட்ச்களையும் ரன் அவுட் வாய்ப்பையும் தவறவிட்டதால் முதல் டி20 போட்டியில் தோற்றோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கூறினார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில்  4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மேக்ஸ்வெல் 46 (24), லின் 37 (20), ஸ்டோய்னிஸ் 33 (19) மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் 27 (24) ரன்கள் எடுத்தனர். மழையால் ஆட்டம் 17 ஓவர்களோடு நிறுத்தப்பட்டதால், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்து, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் ஷிகர் தவான் 76 (42), தினேஷ் கார்த்திக் 30 (13) ரன்கள் எடுத்தனர். ஆட்டநாயகனாக ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் ஆதாம் ஸம்பா தேர்வு செய்யப்பட்டார்.

தோல்விக்கு பின் பேசிய ஷிகர் தவான், ’ இரு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தப் போட்டியின் மூலம் அதிக நம்பிக்கை கிடைத்துள்ளது. இந்த தன்னம்பிக்கையை அடுத்த போட்டிக்கு கொண்டு செல்ல வேண்டும். களத்தில் தவறவிடப்பட்ட வாய்ப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தும். சில கேட்ச்களை கோட்டை விட்டது, ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டது எல்லாம் தோல்விக்கு காரணம். இருந்தாலும் போட்டியில் இதெல்லாம் சகஜம்.

(ஸம்பா)

நாங்கள் பந்துவீசும்போது மிடில் ஓவர்களில் கூடுதல் ரன்களைக் கொடுத்துவிட்டோம். நான் இந்த ஆடுகளத்தில் ஏற்கனவே ஆடிய அனுபவம் இருப்பதால் ரசித்து ஆடினேன். இந்தப் போட்டியில், சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா ஆதிக்கம் செலுத்தினார். அடுத்த போட்டி மெல்போர்னில் நடக்கிறது. அங்குதான் என் குடும்பம்  உள்ளது, அதனால் அங்கு ஆடப் போவது மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ஞ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை, விராத் கோலியும், ஸ்டோயினிஸ் வழங்கிய எளிய கேட்ச் வாய்ப்பை, கலீல் அகமதுவும் வீணடித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த போட்டி மெல்போர்னில் நாளை நடக்கிறது. 

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close