[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி அபாயகரமானது: ரோகித் சர்மா

australia-at-home-will-always-be-dangerous-says-rohit-sharma

தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி எப்போதும் அபாயகரமானதுதான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 தொடர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடு கிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி பிரிஸ்பேனில் நாளை நடக்கிறது. 

இந்த தொடர் பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, ‘இந்திய அணி வேகமான ஆடுகளமான பெர்த், பிரிஸ்பேன் ஆகியவற்றில் விளையாடி இருக்கிறது. இந்த இரண்டு ஆடுகளங்கள் சவாலானது. ஆஸ்திரேலிய பவுலர்கள் உயரமானவர்கள். அவர்களுக்கு இந்த ஆடுகளங்கள் சாதகமாக இருக்கும். இந்திய பேட்ஸ்மேன்கள் உயரமானவர்கள் இல்லை என்பதால், கொஞ்சம் கடினம்தான். இருந்தாலும் நமது வீரர்கள் இந்த முறை சூழ்நிலையை மாற்றி எழுதும் உறுதியுடன் வந்துள்ளனர். சவாலை சந்திக்க தயாராக இருக்கிறோம். 

இந்தியாவுக்கு வெளியே விளையாடுவது எப்போதும் சிறப்பானதுதான். ஆஸ்திரேலிய மண்ணில் அணியாக சிறப்பாக செயல்பட்டு முத்திரை பதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணி எப்போதுமே அபாயகரமானது என்பதில் சந்தேகமில்லை. ஓர் அணியாக செயல்பட்டு இங்கு நாங்கள் வெல்வோம். சில வீரர்கள் மட்டும் ஆட்ட திறனை அதிகரிப்பது வெற்றிக்கு போதுமானதாக இருக்காது. அனைவரும் சிறப்பாக செயல்படுவோம். எங்களிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள். இவர்களை கொண்டு நெருக்கடி கொடுக்க முயற்சி செய்வோம். 

குறுகிய வடிவிலான போட்டியில் நான் இங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். டெஸ்ட் போட்டியில் இங்கு ஆடுவதுதான் சவால். தற்போது டெஸ்ட் பற்றி சிந்திக்கவில்லை. டி20 தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது பற்றிதான் சிந்தித்து வருகிறோம்’ என்றார்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close