[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

தோனியிடம் பழைய ஆட்டத்தை எதிர்பார்ப்பது தவறு - கபில்தேவ் ஓபன் டாக்

everyone-should-understand-that-ms-dhoni-is-not-20-years-old-anymore-says-kapil-dev

மகேந்திர சிங் தோனி மீண்டும் 20 வயது இளம் வீரரைப் போல் விளையாட முடியாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார். 

நீண்ட காலமாக கிரிக்கெட் உலகில் கோலோச்சி வந்த தோனி, தனது கிரிக்கெட் பயணத்தின் இறுதி பக்கங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவருக்கு, டி20 போட்டிகளில் கூட அவரது மோசமான பாஃர்ம் காரணமாக வாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது. மைதானங்களுக்கு உள்ளே தற்போதைய தருணத்தில், 50 ஓவர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் அவர் விளையாடி வருகிறார். நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வரவிருக்கின்ற ஆஸ்திரேலியா தொடர்களில் டி20 போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது அவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

        

தோனியின் நிலை குறித்து கபில் தேவ் கூறுகையில், “தோனி இதுவரை என்ன செய்திருக்கிறாரே அதுவெல்லாம் சிறப்பான பங்களிப்பு. ஆனால், இதில் மோசமான விஷயம் என்னவென்றால், தோனி 20 அல்லது 25 வயது பழைய இளம் வீரரை போல் விளையாட வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது தான். இனிமேல் அது நடக்கப் போவதில்லை. 

         

அவரிடம் அனுபவங்கள் உள்ளது. தன்னுடைய அனுபவத்தை கொண்டு அவர் அணிக்கு உதவலாம். அதனை அவர் சிறப்பாக செய்வார். அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இந்திய அணியின் சொத்து தோனி. அவரது பிட்னஸ் தான் முக்கியம். அவர் மேலும் போட்டிகளை விளையாட வேண்டும் என விரும்புகிறேன்” என்று பேசியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close