[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

ரோகித், விராத் கோலியை முந்தினார் மிதாலி ராஜ்!

mithali-raj-surpassing-virat-kohli-rohit-sharma

டி20 போட்டியில், அதிக ரன் குவித்த இந்தியர்கள் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார். 

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், சதம் விளாசி சாதனை படைத்திருந்தார். இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. மிதாலி ராஜ் 56 ரன்கள் விளாசி வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். 

இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை நேற்று எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் குவித்தது. மிதாலி ராஜ் 51 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதையடுத்து தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. 

இந்நிலையில் டி20 போட்டியில், அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மிதாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராத் கோலி, தோனி ஆகியோரை விட அதிக ரன் குவித்து அவர் முன்னணியில் இருக்கிறார். மிதாலி ராஜ், 2,283 ரன்கள் எடுத்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, டி20 அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். அவர் 2207 ரன்கள் எடுத்திருந்தார். அதை மிதாலி ராஜ் இப்போது முறியடித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close