[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

ஆஸி.தொடருக்காக, வீடியோ பார்த்து பயிற்சி: முகமது ஷமி

preparing-for-australia-tour-by-watching-videos-shami

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் தொடருக்காக, வீடியோவை பார்த்து பயிற்சி பெற்று வருகிறோம் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது.  சமீபகாலமாக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது ஆஸ்திரேலிய அணி.

இதனால், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை செய்யப்பட்டுள்ள முன்னாள் வீரர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோரின் தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான தொடர் தொடங்குவதற்கு முன்பாக, அவர்களுக்கான தடை நீக்கப்படும் என்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர்கள் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தற்போது ரஞ்சி போட்டியில் விளையாடி வருகிறார். அவர், ஆஸ்திரேலிய தொடருக்காக, வீடியோவை பார்த்து பயிற்சி பெற்று வருவதாகக் கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ‘இங்கிலாந்து தொடரில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆகிய நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். ஆஸ்திரேலியா விலும் சிறப்பாகவே செயல்படுவோம். அதற்கான பயிற்சிகளைத் தொடங்கிவிட்டோம்.

வலுவான அந்த அணியை வெல்வதற்கான திட்டங்களை வகுத்திருக்கிறோம். அதற்கு ஏற்ப சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீச பயிற் சி எடுத்து வருகிறோம். ஸ்மித், வார்னர் இல்லாத நிலையில் அந்த அணி பலமிழந்த அணிதான். இருந்தாலும் திட்டத்தைச் சரியாக செயல்படுத் தினால் வெற்றி பெறலாம்’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close