[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது

“மற்றவர்கள் சொல்வதெல்லாம் விஷயமில்லை” - ஃபார்முக்கு திரும்பிய தவான்

it-doesn-t-matter-to-me-what-people-say-i-back-my-game-shikhar-dhawan

தனது ஆட்டம் குறித்து மற்றவர்கள் சொல்வதெல்லாம் விஷயமில்லை, தான் மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் தவான் தெரிவித்துள்ளார்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணி இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிகோலஸ் பூரான், பிராவோவின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. இந்திய அணி தரப்பில் சாஹல் 2 விக்கெட் சாய்த்தார். 

182 ரன் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் 17 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து, ஷிகார் தவானுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். தவான் 36 பந்திலும், பண்ட் 30 பந்திலும் அரைசதம் விளாசினர். ஆட்டம் கடைசி பந்து வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசி பந்தில் பாண்டே ஒரு ரன் எடுக்க, இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 

நீண்ட நாட்களாக டி20 போட்டியில் ஃபார்மில் இல்லாத ஷிகர் தவான், கடந்த இரண்டு போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். நேற்றைய போட்டியில் 62 பந்துகளில் 92 ரன்கள் எடுத்த அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஃபார்முக்கு வந்தது தொடர்பாக பேசிய தவான், “இது ஒரு சிறந்த போட்டி. இரண்டு விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்தோம். ரிஷப் பண்ட் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அடித்து விளையாடுவார் என்பது எனக்கு தெரியும். அவர் சில சிக்ஸர்களை அடித்த பிறகு, நானும் அவருடன் அதிரடியில் இணைந்து கொண்டேன். என் ஆட்டத்தை பற்றி மற்றவர்கள் கூறுவது ஒரு விஷயமே இல்லை. என்னைப் பொருத்தவரை நான் மீண்டும் எனது ஆட்டத்தை உணர்கிறேன். நான் எனது பழைய ஆட்டத்திற்கு திரும்பியுள்ளேன்” எனத் தெரிவித்தார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close