[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்

சச்சினின் இந்த சாதனையை கோலியால் முறியடிக்க முடியாது: ஷேவாக்

sehwag-says-kohli-won-t-be-able-to-beak-this-milestone-of-tendulkar

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடித்து வரும் விராத் கோலியால், சச்சினின் ஒரே ஒரு சாதனையை மட்டும் முறியடிக்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர வீரேந்திர சேவாக் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி. ரன் மெஷின் என்று அழைக்கப்படும் இவர், பல சாதனைகளை செய்து வருகிறார். சமீபத்தில்  விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை விராத் முறியடித்தார். இதே போல இன்னும் பல சாதனைகளை அடுத்தடுத்த தொடர்களில் செய்ய இருக்கிறார்.


இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் கூறும்போது, ‘விராத் பல்வேறு சாதனைகளை படைப்பார் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். நானும் அதை சொல்லி வருகிறேன். அவர் பல சாதனைகளை படைக்கலாம். ஆனால், சச்சின் டெண்டுல்கரின் ஒரே ஒரு சாதனையை அவரால் முறியடிக்க முடியாது.

அது, 200 டெஸ்ட் போட்டி. சச்சினால் மட்டுமே இத்தனை டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடிந்திருக்கிறது. இன்னொரு வீரரால் இந்த சாதனையை செய்ய முடியாது. 200 டெஸ்ட்டை தொட வேண்டும் என்றால் குறைந்தது 24 வருடங்களாவது கிரிக்கெட் விளையாட வேண்டும்’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close