[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

கடைசி டி20: தோனி, கோலி ஆப்சென்டால் சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை மந்தம்!

final-t20-ticket-sales-not-according-to-expectations

இந்திய கிரிக்கெட் அணியில், சிஎஸ்கே-யின் செல்லப்பிள்ளை தோனியும், கேப்டன் விராத் கோலியும் இல்லாததால் சென்னையில் நடைபெறும் கடைசி டி20 போட்டிக்கான டிக்கெட் விற்பனை எதிர்பார்த்தபடி இல்லை என்று கூறப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று இந்தத் தொடரையும் 2-0 என்று கைப்பற்றிவிட்ட நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. 

லக்னோவில் 6 ஆம் தேதி நடந்த 2வது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள் போட்டி முடிந்ததும் தீபாவளி கொண்டாட்டத்துக்காக தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். 

வெஸ்ட்இண்டீஸ் அணியினர் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர்.  சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று மாலை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். இந்திய அணி வீரர்கள் நாளை சென்னை வருகிறார்கள். 

இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. 1200 ரூபாயில் இருந்து 2400 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்தபடி விற்பனை நடைபெறவில்லை. இந்த மைதானத்தில் 24 ஆயிரம் ரசிகர்கள் இருக்கலாம். குறைந்த அளவு ரசிகர்களே டிக்கெட் வாங்கியுள்ளனர். இன்னும் இரண்டு நாள் இருப்பதால் டிக்கெட் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும் சென்னையில் செல்லப்பிள்ளையுமான தோனி இல்லாததாலும் இந்திய கேப்டன் விராத் கோலி இல்லாததாலும் ரசிகர்கள் இந்தப் போட்டியில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close