[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது

“என்னது; பும்ரா ஐபிஎல் விளையாடக்கூடாதா..?” - கோலியை எதிர்த்த ரோகித் ஷர்மா

virat-kohli-wants-pacers-to-miss-ipl-2019-rohit-sharma-opposes-the-idea

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஐபிஎல் போட்டிகளில் பும்ரா ஓய்வெடுக்க வேண்டுமென்ற கேப்டன் கோலியின் கோரிக்கையை துணைக் கேப்டன் ரோகித் ஷர்மா எதிர்த்துள்ளார்.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் பேரம் தற்போதே தொடங்கிவிட்டது. அதற்கான தகவல்களும் அவ்வப்போது கசிந்து வருகிறது. ஐபிஎல் போட்டிகள் என்பது சுமார் 50 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு 16 போட்டிகள் விளையாடிய பின்னர் அரையுறுதி, இறுதிப்போட்டி என மேலும் சில போட்டிகளில் விளையாடும். இந்தப் போட்டிகள் பேட்ஸ்மேன்களை உருவாக்கும் போட்டிகளாக அமையும். அதேநேரம் சிறந்த பந்துவீச்சளார்களின் பந்துகளைப் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கும் அளவிற்கு ஐபிஎல் பழக்கபடுத்திவிடும். அதுமட்டுமின்றி ஐபிஎல் விளையாடும் வீரர்கள் தொடர் போட்டிகளால் களைத்துவிடுவார்கள். 

இதனால் அவர்களுக்கு சில வாரங்கள் ஓய்வு தேவைப்படும். 2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் இறுதியில் முடிவடையவுள்ளது. அதேசமயம் மே மாதம் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளது. இதனால் இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர்கள் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஓய்வெடுக்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக பும்ரா மற்றும் புவனேஷ்குமார் ஐபிஎல்-ஐ தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்நிலையில் கோலியின் கோரிக்கைக்கு ரோகித் ஷர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏனென்றால் ஐபிஎல் என்பது கிரிக்கெட் வீரர்களுக்கு பணத்தை வாரிக்கொடுக்கும் போட்டியாக உள்ளது. இதில் ரோகித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். அவரது அணியில் உள்ள முக்கிய பந்துவீச்சாளர் பும்ரா. அவரை விளையாட வேண்டாம் என்று கோலி கூறியிருப்பதால், தற்போது ரோகித் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

அத்துடன், “மும்பை இந்தியன்ஸ் அரை இறுதியிலோ அல்லது இறுதிப் போட்டிக்கோ சென்றால் பும்ரா பந்துவீச்சு முக்கியமானது. அந்த நேரத்தில் நான் அவருக்கு ஓய்வளிக்க முடியாது” என ரோகித் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேப்டனும், துணைக் கேப்டனுமான கோலி மற்றும் ரோகித் இடையே ஏற்பட்டுள்ள இந்தக் கருத்து மோதல், கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close