[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

இந்திய கேப்டன் இப்படி செய்யலாமா? கிரிக்கெட் வாரியம் அதிருப்தி!

bcci-unhappy-with-kohli-response-to-fan

தன்னை விமர்சித்த ரசிகரை வெளிநாட்டுக்குச் செல்லுமாறு கூறிய விராத் கோலியின் வீடியோ பதிவு இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

உலக அளவில் சிறந்த பேட்ஸ்மன்களில் ஒருவராக விராத் கோலி திகழ்கிறார். இந்திய அணியில் அவர் தொடர்ச்சியாக பாஃர்மில் உள்ளார். சச்சின் உள்ளிட்ட பலரின் சாதனைகளை  முறியடித்து வருகிறார். 216 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 38 சதம், 48 அரைசதங் களுடன் 10,232 ரன் குவித்துள்ளார். அதேபோல், 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 24 சதம், 19 அரைசதங்களுடன் 6331 ரன் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 2102 ரன்னும், ஐபிஎல் போட்டிகளில் 4948 ரன் எடுத்துள்ளார். சமீப காலமாக அவர் மிரட்டி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஹாட்ரிக் சதம் அடித்தார்.

Read Also -> இந்தியாவுக்கு எதிரான தொடர்: ஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்!

இந்நிலையில், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விராத் கோலி அளித்த பதில் சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோவில், ரசிகர் ஒருவர் தெரிவித்த கருத்தை படித்து காட்டுகிறார். “விராத் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகிறார். அவருடைய பேட்டிங்கில் எதுவும் சிறப்பாக இல்லை. எனக்கு இந்தியர்களை விட, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தைப் பார்க்கவே பிடிக்கும்” என அந்த ரசிகர் கூறியுள்ளார்.

Read Also -> நியூசி.வீரர் ஹாட்ரிக் விக்கெட்: சரிந்தது பாகிஸ்தான் அணி!

ரசிகரின் அந்தக் கேள்விக்கு பதிலளித்த விராத், “நீ இந்தியாவில் வாழக்கூடாது என நினைக்கிறேன். வேறு நாட்டிற்குச் சென்று ஏன் வாழ்க்கை நடத்தக் கூடாது?. மற்ற நாடுகளை நேசித்தால், எதற்கு நமது நாட்டில் இருக்கிறாய்? என்னைப் பிடிக்கவில்லை என்பது பற்றி கவலையில்லை. மற்ற நாட்டு வீரர்களை பிடித்தால், நீ நம் நாட்டில் வாழக்கூடாது. உனக்கு எது முதன்மையானது என்பதை தேர்ந்தெடு” என கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார்.

Read Also -> விதியை மீறி தமிழகத்தில் பட்டாசு வெடித்த 2 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு  

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்தக் கருத்துக்கு கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. ’விராத் கோலி ரசிகர்களுடன் அதிக நேரம் செலவழிப்பதில்லை’, “இப்படியொரு கருத்தை விராத்திடம் இருந்து எதிர்பார்க்கவில்லை”, “மற்ற நாட்டு வீரர்களை ரசிப்பது என்பது, இந்தியா வை வெறுப்பது ஆகாது”, “வெளிநாட்டு பொருட்களை விளம்பரம் செய்கிறார், இத்தாலியில் திருமணம் செய்தார், வெளிநாட்டு தண்ணீரை குடிக்கிறார்” என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் அள்ளி தெளித்து வருகின்றனர்.

Read Also -> “கோலியிடம் இருந்து இப்படியொரு பேச்சா?” - காட்டமாக விமர்சித்து தள்ளிய ரசிகர்கள்  

இந்திய ரசிகர்களை பொருத்தவரை பல்வேறு நாட்டு வீரர்கள் மீதும் அதிக பாசம் வைப்பார்கள். பிரைன் லாரா, ஸ்டீவ் வாஹ், வாசிம் அக்ரம், முரளிதரன், ஏபி டிவில்லியர்ஸ், ஷேன் வார்ன் உள்ளிட்ட பல்வேறு வீரர்களை இந்திய ரசிகர்களுக்கு பிடிக்கும். அதே போல், சச்சின், தோனி உள்ளிட்டோருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். விராத் கோலிக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் விராத் இப்படி கருத்துத் தெரிவித்திருப்பதை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை.

Read Also -> அடேங்கப்பா.. ! ஒரே ஓவரில் 43 ரன் விளாசல் - நியூ. வீரர்கள் புதிய சாதனை  


இந்நிலையில் அணியின் கேப்டனாக இருந்துகொண்டு விராத் கோலி இப்படி பேசியிருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அனிருத் சவுதாரி இதுபற்றி கூறும்போது, ‘கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை மதிக்கிறது. அவர்களின் தேர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நான் சுனில் கவாஸ்கர் பேட்டிங்கை ரசிப்பேன். அதோடு விவியன் ரிச்சர்ட்ஸ், கிரீனிட்ஸ், தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆடுவதையும் ரசிப்பேன். சச்சின், சேவாக்கை போலவே, மார்க் வாஹ், பிரைன் லாரா உட்பட பலரின் ஆட்டங்களை ரசிப்பேன். நாடு மற்றும் அரசியலைக் கடந்தது சிறப்பான கிரிக்கெட்டை மதிக்கும் பண்பு வேண்டும் என நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Read Also -> சர்கார் படத்தின் சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ 

பெயர் குறிப்பிடாத மற்றொரு அதிகாரி, ‘ரசிகர்களை வெளிநாட்டுக்கு செல்ல சொல்லும் விராத் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இல்லை யென்றால், புமா (Puma) போன்ற நிறுவனங்கள் நூறு கோடி ரூபாய்க்கு அவரிடம் ஒப்பந்தம் செய்ய விரும்பாது. சர்வதேச நிறுவனங்கள் விளம்பர ஒப்பந்தங்களை நிறுத்தினால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் வீழும். அது வீரர்களின் ஊதியத்தையும் பாதிக்கும். இப்படி கூறியிருப் பதன் மூலம் தனது ஒப்பந்தத்தையும் கோலி மீறியிருக்கிறார். விராத் சிறந்த வீரர். அவர் சிறந்த மனிதராகவும் மாற முயற்சிக்க வேண்டும்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close