[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்

நியூசி.வீரர் ஹாட்ரிக் விக்கெட்: சரிந்தது பாகிஸ்தான் அணி!

trent-boult-s-hat-trick-headlines-new-zealand-s-emphatic-win

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச் சாளர் டிரென்ட் போல்ட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்றது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 11 வது முறையாக தொடரை வென்று பாகிஸ்தான் அணி சாதனை படைத்தது. 

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டி நடந்து வருகிறது. முன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. 

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி, 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ராஸ் டெய்லர் 80 ரன்களும் டாம் லாதம் 68 ரன்களும் எடுத்தனர்.   பாகிஸ்தான் தரப்பில் ஷகின் ஷா அப்ரிதி, ஷதாப் கான் ஆகியோர் தலா 4 விக்கெட் டுகளை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சில் 47.2 ஓவரில் 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட் டையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் சர்ப்ராஸ் அகமது 69 ரன்களும் இமாத் வாசிம் 50 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் திணறி விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் நியூலாந்து அணி வெற்றிபெற்றது.

போட்டியில், நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், பஹார் ஜமான் (1 ரன்), பாபர் அசாம் (0), முகமது ஹபீஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3 வது நியூசிலாந்து வீரர் இவர். இதற்கு முன் டேனி மோரிசன், ஷேன் பாண்ட் ஆகியோர் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close