[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

“கோலியிடம் இருந்து இப்படியொரு பேச்சா?” - காட்டமாக விமர்சித்து தள்ளிய ரசிகர்கள்

dont-live-in-india-if-you-love-batsmen-from-other-countries-virat-kohli-responds-to-fan

வெளிநாட்டினரை ரசிப்பவர்கள் இந்தியாவில் வாழக் கூடாது என்று விராட் கோலி பேசியது சமூக வலைத்தளங்களில் ட்ரோல் ஆகியுள்ளது.

உலக அளவில் சிறந்த பேட்ஸ்மன்களில் மிகவும் முக்கியமானவராக விராட் கோலி திகழ்கிறார். இந்திய அணி விராட் கோலி மட்டும் தொடர்ச்சியாக பாஃர்மில் உள்ளார். சச்சின் உள்ளிட்ட பலரின் சாதனைகளை விராட் கோலி முறியடித்து வருகிறார். 216 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 38 சதம், 48 அரைசதங்களுடன் 10,232 ரன் குவித்துள்ளார். அதேபோல், 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 24 சதம், 19 அரைசதங்களுடன் 6331 ரன் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 2102 ரன்னும், ஐபிஎல் போட்டிகளில் 4948 ரன் எடுத்துள்ளார். சமீப காலமாக அடித்தால் சதம் என்று பேட்டிங்கில் விராட் கோலி மிரட்டி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஹாட்ரிக் சதம் அடித்தார். 

இந்நிலையில், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விராட் கோலி அளித்த பதில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இதுதொடர்பாக விராட் கோலி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ, ரசிகர் ஒருவர் தெரிவித்த கருத்தினை படித்து காட்டுகிறார். “விராட் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகிறார். அவருடைய பேட்டிங்கில் எதுவும் சிறப்பாக இல்லை. எனக்கு இந்தியர்களை விட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தைக் காணவே பிடிக்கும்” என அந்த ரசிகர் கூறியுள்ளார்.

              

ரசிகரின் அந்தக் கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, “நீ இந்தியாவில் வாழக்கூடாது என நான் நினைக்கிறேன். வேறு நாட்டிற்குச் சென்று ஏன் வாழ்க்கை நடத்தக் கூடாது?. மற்ற நாடுகளை நேசித்தால், அப்போது எதற்கு நமது நாட்டில் இருக்கிறாய்? என்னைப் பிடிக்கவில்லை என்பது பற்றி கவலையில்லை. மற்ற நாட்டு வீரர்களை பிடித்தால், நீ நம்முடைய நாட்டில் வாழக்கூடாது எனக் கருதுகிறேன். உனக்கு எது முதன்மையானது என்பதை தேர்ந்தெடு” என கடுமையாக தாக்கியுள்ளார்.

       

இந்த வீடியோ பதிவு மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார் விராட் கோலி. அவரது இந்தக் கருத்துக்கு கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. “விராட் கோலி ரசிகர்களுடன் அதிக நேரம் செலவழிப்பதில்லை”, “இப்படியொரு கருத்தை விராட் கோலியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை”, “மற்ற நாட்டு வீரர்களை ரசிப்பது என்பது, இந்தியாவை வெறுப்பது ஆகாது”, “வெளிநாட்டு பொருட்களை விளம்பரம் செய்கிறார், இத்தாலியில் திருமணம் செய்தார், வெளிநாட்டு தண்ணீரை குடிக்கிறார்” என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் அள்ளி தெளித்து வருகின்றனர்.

 

“நான் ஏபி டிவில்லியர்ஸ் ரசிகர், அப்படியென்றால் தென்னாப்ரிக்காவுக்கு செல்ல வேண்டுமா?” என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார். விராட் கோலியின் பேட்டிங் திறன் குறித்து பல்வேறு நாட்டு வீரர்களும் புகழ்ந்து பேசிய கருத்துக்களையும் சிலர் பதிவிட்டனர். 

இந்திய ரசிகர்களை பொருத்தவரை பல்வேறு நாட்டு வீரர்கள் மீதும் அதிக பாசம் வைப்பார்கள். பிரைன் லாரா, ஸ்டீவ் வாஹ், வாசிம் அக்ரம், முரளிதரன், ஏபி டிவில்லியர்ஸ், ஷேன் வார்னே உள்ளிட்ட பல்வேறு வீரர்களை இந்திய ரசிகர்களுக்கு பிடிக்கும். அதேபோல், சச்சின், தோனி உள்ளிட்டோருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில், விராட் கோலியின் இந்தக் கருத்துக்கு அவரது ரசிகர்கள் மத்தியிலும் முகம் சுழிக்கும்படி செய்துள்ளது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close