[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

தீபாவளி பரிசாக டி20 தொடரை வென்றது இந்தியா

indvswi-2nd-t20-india-won-the-match-and-series

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டி20 போட்டி இன்று லக்னோவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 41 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில், ஃபபியன் அலென் வீசிய பந்தில் ஷிகர் தவான் கேட்ச் அவுட் ஆனார். இதையடுத்து வந்த ரிஷப் பண்ட் 5 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகினார். தொடர்ந்து சரவெடி வெடித்த இறுதிவரை ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். ராகுல் 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. 

இதைத்தொடர்ந்து 196 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்த்து, விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஹோப் 6 (8) ரன்களில் வெளியேற, அடுத்தடுத்து வந்த ஹெட்மயர் 15 (14), ப்ராவோ 23 (18), ராம்டின் 10 (17) என சொற்ப ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close