[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

“தோனிக்காக விட்டுக் கொடுக்க மனமில்லையா?” - கோலி மீது ரசிகர்கள் பாய்ச்சல்

ms-dhoni-needed-just-1-run-fans-criticise-virat-kohli-as-msd-remains-at-9-999-odi-runs-for-india

ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன் என்ற மைல்கல்லை எட்ட ஒரே ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், கடைசிப் போட்டியில் தோனியை ஏன் முன் கூட்டியே இறக்கவில்லை என்று அவரது ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 104 ரன்கள் மட்டும் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து 14.5 ஓவரிலேயே இலக்கை எட்டியது. தாவன் 6 ரன்னில் அவுட் ஆக, ரோகித் 63, விராட் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

      

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தோனிக்கு இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்த மூன்று போட்டிகளிலும் தோனி பெரிதாக ரன் எதுவும் அடிக்கவில்லை. மொத்தமே 50 ரன் தான் எடுத்திருந்தார். இருப்பினும், கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கும் போது அவர் 9999 ரன்கள் எடுத்திருந்தார். 

இன்னும் ஒரு ரன் எடுத்திருந்தால் 10 ஆயிரம் ரன் என்ற மைல்கல்லை அவர் எட்டியிருப்பார். ஆனால், கடைசிப் போட்டியில் தோனி விளையாடவில்லை. குறைவான ஸ்கோர் என்பதால் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது. இனி, ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தான் தோனி விளையாட முடியும். ஒரே ஒரு ரன்னை அடிக்க தோனி இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும். 

     

இந்நிலையில், 10 ஆயிரம் ரன் என்ற மைல்கல்லை எட்டுவதற்காக தோனி முன் கூட்டியே களமிறக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கேப்டன் விராட் கோலியை விமர்சித்துள்ளார்கள். நேற்று போட்டி முடிந்த நேரம் முதலே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தோனியின் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே டி20 தொடரில் இருந்து தோனி நீக்கப்பட்ட விஷயத்தில் வெறுப்பில் இருந்த அவரது ரசிகர்கள், தோனி ஒரு ரன் எடுக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டதே என்று வேதனையை அள்ளிக் கொட்டியுள்ளார். 

               

திருவனந்தபுரம் மைதானத்தில் போட்டி நடைபெறவிருந்த நிலையில், அங்கு தோனிக்கு மட்டுமே பெரிய அளவிலான கட் அவுட்டை அவரது ரசிகர்கள் அமைத்து தங்களது பாசத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால், மைதானத்திற்கு வந்த அவரது ரசிகர்கள் அவர் விளையாட முடியாமல் போனதால் ஏமாற்றம் அடைந்தனர். 104 ரன்கள் என்ற குறைவான இலக்கு தானே தோனியை தொடக்க வீரராக களமிறக்கியிருக்கலாமே, குறைந்தபட்சம் தவான் ஆட்டமிழந்த பிறகாவது இறக்கியிருக்கலாமே என்று ட்விட்டரில் ஆர்ப்பரித்துள்ளனர்.  

2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி விளையாடியது. அப்போதையை அணியில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் இடம்பெற்றிருந்தார். அது அவருக்கு கடைசிப் போட்டியாகும். அதனால், தோனி அந்தப் போட்டியில் கங்குலியை அணிக்கு தலைமை தாங்குமாறு கேட்டுக் கொண்டார். தோனியின் அன்புக் கட்டளையை ஏற்று கங்குலி சில ஓவர்களுக்கு கேப்டனாக செயல்பட்டார். கங்குலியும் தோனியின் இந்தப் பண்பை பலமுறை நெகிழ்ந்து பேசியுள்ளார். காங்குலிக்காக தோனி எப்படி நடந்து கொண்டாரோ, அதேபோல் விராட் கோலியும் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என்று பல ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

       

இது ஒருபுறம் இருக்க தோனி ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எட்டிவிட்டார் என்று என்றோ செய்திகள் வெளியாகி இருந்தது. ஒருநாள் போட்டிகளில் தோனி மொத்தம் 10,173 ரன் எடுத்துள்ளார். ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால் 174 ரன்களை அவர் ஆசிய அணிக்காக விளையாடும் போது எடுத்ததாகும். அதனால், ஆசிய அணிக்காக அவர் எடுத்த 174 ரன்களை நீக்கி விட்டு, இந்திய அணிக்காக மட்டும் 9,999 ரன்கள் எடுத்தது மட்டுமே கணக்கிடப்படுகிறது. இன்னும் 1 ரன் எடுத்தால் இந்திய அணிக்காக 10 ஆயிரம் ரன்களை எடுப்பார்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close