[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

ரஜினியுடன் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சந்திப்பு

boxer-mary-kom-meet-rajinikanth-in-chennai

பிரபல ஒலிம்பிக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்தோட்ட இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இருவரும் குத்துச்சண்டை போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

சர்வதேச குத்துச்சண்டை போட்டி வரும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது. 

இதில் கலந்துக் கொள்ள இருக்கும் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நேற்று தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மேரிகோமுடன் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொண்டார். இந்த வீடியோ பரவலாக வைரலானது.

இந்நிலையில் லதா ரஜினிகாந்த குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக வீராங்கனை மேரிகோம்  கலந்துக் கொண்டார். பின்னர், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்தோட்ட இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, மேரி கோமும் ரஜினியும் குத்துச்சண்டை போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக் பரவி வருகிறது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close