[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

ஆஸ்திரேலிய தொடரில் விராத் டீம் அசத்தும்: சச்சின் நம்பிக்கை

sachin-says-india-have-their-best-chance-to-win-in-australia

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரை வெல்ல, இந்திய அணிக்கு அதிக வாய்ப்பிருப்பதாக, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியா செல்கிறது. அங்கு மூன்று டி 20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணி அங்கு தொடரை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறும்போது, ’முந்தைய ஆஸ்திரேலிய அணியையும் இப்போதைய அணியையும் ஒப்பிட்டால், இந்திய அணி வெல்வதற்கு இப்போது அதிகம் வாய்ப்பிருக்கிறது. இதற்கு முன் அந்த அணி, சிறந்ததாக இருந்தது.  அனுபவம் வாய்ந்த  வீரர்கள் இருந்தார்கள். இப்போது அதிகம் அனுபவம் இல்லாத வீரர்களுடன் அந்த அணி இருக்கிறது. அதனால் இந்தியா அங்கு தொடரை வெல்ல இது சிறப்பான வாய்ப்பு. அதோடு அவர்கள் சரியான சவாலையும் அளிப்பார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

இந்திய அணியில் சிறந்த வேக பந்துவீச்சாளர்களும் சுழல் பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் முதல் 20-25 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்துவிட்டால், நமது வீரர்கள் பெரிய ஷாட்களை அடித்து ரன்களை குவிக்க முடியும். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் அதற்கு ஏற்றது போலவே இருக்கும்’ என்றார்.

அவரிடம், ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த அதிவேக வீரர் என்ற தங்கள் சாதனையை சமீபத்தில் விராத் கோலி முறியடித்தது பற்றி கேட்டபோது,  ’ஒரு வீரராக விராத் அதிக வளர்ச்சி அடைந்து வருகிறார்.

உலகில் முன்னணி வீரர்களில் ஒருவராக அனைத்து காலங்களிலும் அவர் வருவார். ஆனால் ஒப்பீடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை’ என்று தெரிவித்தார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close