[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டது ஏன்? - விராட் விளக்கம்

i-was-not-part-of-that-conversation-says-virat-kohli-on-ms-dhoni-s-ouster-from-t20

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் விக்கெட் கீப்பிங் வேலையை செய்வார்கள். இதில் அணியில் இடம் பிடிக்க இருவருக்கும் கடும்போட்டி நிலவும் எனத் தெரிகிறது.

இதுபற்றி பேசிய தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், 'அடுத்து நடக்க இருக்கிற ஆறு டி20 போட்டிகளில் தோனி விளையாட மாட்டார். நாங்கள் 2-வது விக்கெட் கீப்பர் இடத்தை தேர்வு செய்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். டி 20-ல் தோனியின் வாழ்வு முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல’ என்று கூறியிருந்தார்.

தோனி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தோனி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பல தகவல்கள் பரவின. தோனியின் இடத்துக்கு மாற்று வீரரை தேட வேண்டியது அவசியம் என்றும் அதனால் இப்போதே அதற்கான முயற்சியில் இந்திய கிரிக்கெட் அணி இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. நீக்கம் குறித்த முடிவு தோனியிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் அதை அவர் ஏற்றுக்கொண்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தோனியின் நீக்கம் குறித்து கேப்டன் விராத் கோலி, துணைக் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரிடம் ஆலோசிக்கப்பட்டது. அவர்களின் சம்மதத்துக்குப் பின்பே, தோனியின் நீக்கம் குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் இது குறித்து தேர்வுக்குழு ஏற்கெனவே கருத்து தெரிவித்துவிட்டது. இது குறித்து நான் ஏன் கருத்து சொல்லவேண்டுமென்று தெரியவில்லை. அங்கு நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் நான் இல்லை. அதனால் இது குறித்து தேர்வுக்குழுதான் என்ன நடந்தது என்று சொல்ல வேண்டும். 

தோனி இந்திய அணியின் ஓர் அங்கம். அவர் வழக்கம் போல இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார். ரிஷாப் பன்ட் போன்றவர்களுக்காக அவர் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அவரது விருப்பப்படி பார்த்தால் இது இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதாக படுகிறது. வேறு எந்தக் காரணமும் இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.  
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close