[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

தோனிக்கு 'கட் அவுட்' சேட்டன்களின் பாச மழை !

fans-pay-tribute-to-dhoni-with-35-feet-cut-out-ahead-of-thiruvananthapuram-odi

இந்திய அணியின் கேப்டன்களில் மிக முக்கியமான சாதனைகளை படைத்தவர் தோனி. பல்வேறு கோப்பைகளை அவரது தலைமையிலான அணி வென்றுள்ளது. அதோடு, பேட்டிங்கிலும் ஒரு காலத்தில் இந்திய அணியில் மிடில் ஆர்டர் தூணாக இருந்தவர். தோல்வியின் விளிம்பில் இருந்த போட்டியை கூட தனது மேஜிக் பேட்டிங்கால் வெற்றி பெற செய்வார். விக்கெட் கீப்பிங்கில் கூட இன்றளவும் அவர் உலக அளவில் சிறந்த வீரராக உள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இப்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இப்போது வரை நடைபெற்றுள்ள 4 போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் 1 போட்டியிலும் வெற்றிப்பெற்றது, ஒரு போட்டி டையில் முடிவடைந்தது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்தியா அபார வெற்றிப்பெற்றது.

இதனையடுத்து கடைசி மற்றும் ஐந்தாவது ஒரு நாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய வீரர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ளார். ரிசார்ட்டில் அவர்களுக்கு நல்ல வரவேற்பும் அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பில் நெகிழ்ந்த கோலி ரிசார்ட் வரவேற்பு புத்தக்ததில் “கேரளாவில் இருப்பது என்பது பேரின்பத்திற்கு குறைவில்லாத விஷயம். கேரளா வருவதை நான் மிகவும் விரும்புகிறேன்."

"இங்குள்ள இடங்களின் தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும். கேரளாவின் அழகு என்பது அனுபவிக்க வேண்டிய ஒன்று. ஒவ்வொருவரும் இங்கு வந்து இந்த அழகினை அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது கடவுளின் தேசம். கேரளா எல்லோரும் வருவதற்கு முற்றிலும் பாதுகாப்பான இடம். ஒவ்வொரு முறையும் என்னை மகிழ்விக்கும் இந்த அற்புதமான இடங்களுக்கு நன்றி" என எழுதியிருந்தார்."

இது மட்டுமல்லாமல் தோனி கேரளாவின் செல்லக்குட்டி, ஆமாம் சென்னையில் சி.எஸ்.கே. அணிக்கு எப்படியொரு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ, அதேபோல கேரளாவிலும் உண்டு. கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான்களான மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு உலகக் கோப்பையின் போது கட் அவுட்டுகள் வைத்த சேட்டன்கள், இம்முறை தோனிக்கும் கட் அவுட் வைத்து அசத்தியிருக்கின்றனர்.

தோனி பேட்டால் விளாசுவது போல் அமைக்கப்பட்டுள்ள கட் அவுட் 35 அடி உயரம் கொண்டது. இதனை போட்டி நடைபெறும் மைதானத்தின் வெளியே ரசிகர்கள் வைத்துள்ளனர். ஒரு கிரிக்கெட் வீரருக்கு கட் அவுட் வைப்பது இதுவே முதல் முறை என்பதால் மற்ற மாநில ரசிகர்கள் சேட்டன்களை வாயை பிளந்து பார்க்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close