[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

ராயுடு சொன்னார், நான் கண்டுக்கல: ரோகித் சர்மா

i-don-t-think-about-scoring-hundreds-or-double-hundreds-rohit-sharma

’பேட்டிங் செய்யும் போது எப்போதும் சதம் மற்றும் இரட்டை சதம் பற்றி நினைப்பதில்லை’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இப்போது விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. 3-வது போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மும்பையில் உள்ள பிராபோன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியை மணி அடித்து சச்சின் தெண்டுல்கர் தொடங்கி வைத்தார்.

Read Also -> 2-வது மனைவியை தாக்கிவிட்டு முதல் மனைவி தலைமறைவு: கன்னட ஹீரோ அப்செட்! 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 162 ரன்களும் ராயுடு 100 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோர் உயர வழி வகுத்தனர். பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் மட்டும் அதிகப்பட்சமாக 54 ரன்கள் எடுத்தார்.

இந்திய தரப்பில் கலீல் அகமது, குல்தீப் தலா 3 விக்கெட்டும், ஜடேஜா, புவனேஷ்வர்குமார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. 

Read Also -> 'ராயுடு ரொம்பவே புத்திசாலி' விராட் கோலி புகழாரம் ! 

போட்டி நடந்த மும்பை பிராபோன் மைதானம், ரோகித் சர்மாவுக்கு ராசியானது. இங்குதான் 2007 ஆம் ஆண்டு, அவர் முதல் டி20 சதத்தை குஜராத்துக்கு எதிராக பதிவு செய்தார். ரஞ்சிப் போட்டியில் குஜராத்துக்கு எதிராக இதே மைதானத்தில் 309 ரன்கள் விளாசியுள்ளார்.

போட்டிக்குப் பின் பேசிய ரோகித் சர்மா கூறும்போது, ‘’இந்த மைதானத்தில் விளையாடுவது எனக்கு பிடித்தமானது. இங்கு என்னால் ரசித்து பேட்டிங் செய்ய முடியும். ஆடுகளம் சிறப்பானதாக, வேகமாக இருந்தது.

Read Also -> ஸ்டம்பிங்கில் தெறிக்கவிட்ட தோனி - மிரண்டு போன ஜடேஜா !(வீடியோ)

இதனால் மிகவும் கடினமாக அடித்து ஆட வேண்டிய அவசியமில்லை. இடைவெளியை சரியாக கணித்து பந்துகளை அடித்தேன். நீங்கள் போதுமான அளவு, கிரிக்கெட் விளையாடிய மைதானத்துக்குள் வரும்போது நம்பிக்கை வந்துவிடும். அதுதான் எனக்கும். இந்த ஆடுகளத்தின் இயல்பை, புரிந்துகொண்டு விளையாடினேன். 

பேட்டிங் செய்யும் போது எப்போதும் சதம் மற்றும் இரட்டை சதம் பற்றி நினைப்பதில்லை. அதிக ரன்கள் குவிக்க வேண்டும். அணியின் ஸ்கோர் அதிகரிக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன். மூன்று முறை இரட்டை சதம் அடித்தபோதும் அப்படித்தான். ஆட்டத்தின் நடுவில் ராயுடு, ’இரட்டை சதம் அடிப்பீர்கள்’ என்றார். நான் அதைப்பற்றி கவலைப்படாமல் பேட்டிங்கில் கவனம் செலுத்தினேன். எங்கள் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். கலீல் அகமது பந்தை ஸ்விங் செய்து வீசியது சிறப்பாக இருந்தது. தனது பந்துவீச்சை புரிந்துகொண்டு வீசினார்’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close