[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

150 ரன் விளாசினார் ரோகித் - அம்பத்தி ராயுடு அதிரடி சதம்

india-vs-west-indies-rohit-sharma-slams-21st-odi-century-outdoes-sachin-tendulkar-sourav-ganguly

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 150 ரன் விளாசியுள்ளார். 

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய தவான் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்த மூன்று போட்டிகளில் சதம் விளாசிய கேப்டன் விராட் கோலி இந்தப் போட்டியில் 16 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது.

60 பந்துகளில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, 98 பந்துகளில் சதம் விளாசினார். அவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராயுடு 51 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 40 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 128 ரன்களுடனும், ராயுடு 70 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

தொடர்ந்து சிக்ஸரும் பவுண்டரியுமாக ரோகித்தும், ராயுடுவும் விளாசினர். 131 பந்தில் 150 ரன் குவித்தார். 200 ரன் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 162 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். 20 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடித்தார். 7வது முறையாக ரோகித் சர்மா 150 ரன்களை எட்டியுள்ளார். இந்திய அணிக்காக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தார் ரோகித். 

இந்திய அணி 46.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்துள்ளது. ராயுடு அதிரடியாக விளையாடி 80 பந்தில் சதம் விளாசினார். இது அவருக்கு மூன்றாவது சதம். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close