[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயலால் வீடுகளை இழந்த 50 விவசாயிகளுக்கு வீடு கட்டித்தரப்படும் - நடிகர் ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டிச.21ம் தேதி வரை தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தொடர் மழையால் வேலூர், திருவாரூர், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.88 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.74.99 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இடியாப்ப சிக்கலில் இந்தியா பேட்டிங் ! 'கெத்து' காட்டும் வெஸ்ட் இண்டீஸ்

india-face-windies-in-a-series-decider-today-at-mumbai

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை பொறுத்தவரை இந்திய அணி தற்போது இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. இந்திய அணி எளிதில் தொடரை வென்று விடும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி அதிர்ச்சி அளித்து வருகிறது. முதல் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் குவித்தது. இரண்டாவது போட்டியில் நாம் 300 ரன்களுக்கு மேல் அடித்தும் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் போராடி டிரா செய்தது. மூன்றாவது போட்டியில் அந்த அணி தற்போது வென்றுள்ளது. 

நிலையில்லா ரோகித்தும், தவானும் !

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதமடித்த ரோகித் சர்மா, அடுத்தடுத்த ஆட்டங்களில் சொதப்பி வருகிறார். அதேபோல தவான் இதுவரை 35 ரன்களுக்கு மேல் தாண்டிச் செல்லவில்லை. உலகின் மற்ற நாடுகளுக்கு இடையிலான போட்டிகளில் சிறப்பான ரெக்கார்டுகளை வைத்துள்ள தவான், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் பெரிதளவில் ரன்களை குவிக்கவில்லை. இப்போது நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளில் கோலியும், ராயுடுவும் மட்டுமே அணியின் வெற்றிக்கு பங்களித்துள்ளனர். தோனியின் பேட்டிங்கும் சொதப்ப, பன்ட் அதிரடியாக விளையாடினாலும் நீடித்து விளையாடவில்லை. இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பல் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.

களமிறங்குகிறாரா ஜாதவ் ?

மும்பையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் கேதர் ஜாதவ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியக் கோப்பை போட்டியில் காயமடைந்த ஜாதவ் இன்றைய போட்டியில் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. கேதர் ஜாதவ் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுக்கு பதிலாக சேர்க்கப்படவுள்ளார். பவுலிங்கை பொருத்தவரை ஜஸ்ப்ரீத் பும்ரா தனது முதல் ஆட்டத்திலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசி கட்ட ஓவர்களில் புவனேஸ்வர் குமார் ரன்களை எதிரணிக்கு வாரிவழங்கினார். எதிரணி ரன்குவிப்பை சுழற்பந்து வீச்சாளர் கட்டுப்படுத்துவதில் குல்தீப், சஹால் ஆகியோரை இந்திய அணி பெரிதும் நம்பியுள்ளது.

விஸ்வரூபம் எடுத்த வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி புதிய பொலிவுடன் அதிக உற்சாகத்தோடு காணப்படுகிறது. இளம் வீரர்கள் ஷிம்ரன் ஹெட்மயர், ஷேய்ஹோப் ஆகியோர் அபாரமாக ஆடி வருகின்றனர். ஆனால் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பொவல், சந்தர்பால் ஹேம்ராஜ், ரோவ்மேன் ஆகியோர் இன்னும் சிறப்பாக விளையாடவில்லை. அனுபவ வீரரான சாமுவேல்ஸ் பேட்டிங்கில் சொதப்பினாலும், 3 விக்கெட் வீழ்த்தி பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டார். பவுலிங்கில் கேப்டன் ஹோல்டர், ஆஷ்லி நர்ஸ், மெக்காய் ஆகியோர் இந்தியாவுக்கு பயம் காட்டுகின்றனர். எனவே, இன்றையப் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது என்பதை நம்பலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close