[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

“ஒரு ஓவரில் ஆறுமுறை விழுந்துள்ளேன்” - சாதனை குறித்து கோலி நெகிழ்ச்சி

india-skipper-virat-kohli-said-about-quickest-10-000-runs-record

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 10 ஆயிரம் ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை கேப்டன் விராட் கோலி  படைத்திருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், 81 ரன் எடுத்த போது இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார். 205 இன்னிங்சில் இந்தச் சாதனையை விராட் கோலி எட்டியுள்ளார். 10 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் 13வது வீரராக விராட் கோலி இடம் பிடித்தார். சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, தோனி, ராகுல் டிராவிட் ஆகியோரை தொடர்ந்து தற்போது 5வது வீரராக அவர் 10 ஆயிரம் ரன்களை எட்டிப் பிடித்தார். சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்ஸில் 10,000 ரன்களை எட்டியதை இதுவரை சாதனையாக இருந்தது. சச்சினின் அந்தச் சாதனையை விராட் கோலி முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள விராட் கோலி, “நான் மிகவும் பெருமையாகவும், ஆசிர்வாதங்களை பெற்றவனாகவும் உணர்கிறேன். எனது ஒருநாள் போட்டிகள் கிரிக்கெட் வாழ்வில் இப்படி ஒரு சாதனையை செய்வேன் என நான் நினைத்துப் பார்த்ததே இல்லை. இப்படி ஒரு சாதனை படைத்ததற்கு நான் கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்தச் சாதனை அடைந்தவுடன் மனநிறைவு பெற்றதாக உணரவில்லை. நான் இன்னும் பல வருடங்கள் விளையாடவேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறேன். நான் இப்படி சாதனை புரிய வேண்டும் என நினைத்ததில்லை. இந்தியாவிற்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்றே எப்போதும் நினைப்பேன். அதில் மட்டுமே எப்போதும் எனது கவனத்தை செலுத்துகிறேன். 

ரன்கள் சேர்ப்பதை மட்டுமே எனது பணியாக செய்து வந்தேன். நீண்ட காலமாக அதை கடைபிடித்து வந்ததால், அது மொத்தமாக சேர்ந்து சாதனையாக வந்துள்ளது. ஒரு கேப்டனாக அணியை முன்னெடுத்து செலுத்தும்போது, முடிந்த அளவு அதிக ரன்களை எடுக்க நினைப்பேன். நான் எனது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் என்னை சிறப்பான ஆட்டத்திற்கு தயார்படுத்திக் கொள்வேன். அதேசமயம் அணியின் நிலையையும் இணைத்து பார்க்கும்போது, நான் அதிக ரன்களை குவிப்பேன். நான் ஒருபோதும் எனது தனிப்பட்ட பேட்டிங்கில் கவனம் செலுத்தியதில்லை. அணியின் நிலைக்கு என்ன தேவை? என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு பேட்டிங் செய்வேன். 


 
இந்தியாவிற்காக இப்படி ஒரு சாதனை புரிந்ததில் நான் பெருமைப்படுகிறேன். பொறுப்புகளில் இருக்கும்போது மேம்போக்கான மனநிலையில் இருக்கமுடியாது. விளையாட்டின்போது அணியின் கேப்டன் என்ற முறையில் அனைத்து சோதனைகளும் நமக்கு தான் வரும். நான் ஒரு ஓவரில் ரன் ஓடும்போது ஆறுமுறை பாய்ந்து விழுகிறேன் என்றால் அது அணிக்காகதான்.

அடுத்த ஓவரில் நான் விளையாடினால்தான் அணியின் நிலை தடுமாறாமல் இருக்கும் என்பதற்காக, விக்கெட்டை காப்பாற்ற அப்படி விழுகிறேன். ஏனென்றால் அது என் கடமை. அதனால்தான் நான் இந்திய அணிக்காகவும், அணியின் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என நினைக்கிறேன். நான் எப்போது அணிக்கு என்னால் முடிந்த வரை உதவும் வகையில் எனது விளையாட்டை தொடர்வேன்” என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close