[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயலால் வீடுகளை இழந்த 50 விவசாயிகளுக்கு வீடு கட்டித்தரப்படும் - நடிகர் ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டிச.21ம் தேதி வரை தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தொடர் மழையால் வேலூர், திருவாரூர், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.88 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.74.99 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

’ரோகித் மட்டும் எதிர்ல இருந்தா...’ சிலிர்க்கிறார் விராத்!

it-s-never-too-difficult-when-rohit-at-the-other-end-virat-kohli

’எதிர்முனையில் ரோகித் சர்மா நின்றால் போதும், இலக்கை எட்டிப்பிடிப்பதில் கஷ்டம் இருக்காது’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்தது. 

(ஹெட்மையர்)

டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஹெட்மையர் சதமடித்தார். அவர் 79 பந்துகளில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் பாவெல் 51 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் சேஹல் 3 விக்கெட்டும், முகமது ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். கலீல் அகமது ஒரு விக்கெட் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 42.1 ஓவரிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 117 பந்துகளில், 15 பவுண்டரி, 8 சிக்சருடன் 152 ரன்களும் கேப்டன் விராத் கோலி 107 பந்துகளில் 21 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 140 ரன்களும் எடுத்தனர். விராத் கோலிக்கு இது 36 வது சதம். ரோகித் சர்மாவுக்கு இது 20 வது சதம் ஆகும். அம்பத்தி ராயுடு 22 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது விராத் கோலிக்கு வழங்கப்பட்டது. 

பின்னர் அவர் கூறும்போது, ’வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவர்கள் வைத்த 320 ரன் இலக்கு தந்திர மானது. சவாலானது. பார்டனர்ஷிப் அமைந்தால் இந்த இலக்கை எட்ட முடியும் என்பது தெரியும். மறுமுனையில் ரோகித் சர்மா நின்றால் போதும், கஷ்டமே இல்லை. முதல் மூன்று பேட்ஸ்மேன்களிடையே நான் எப்போதும் நிலைத்து நின்று ஆடுவதை விரும்புவேன். ரோகித்திடம், ’ அதிரடியாக ஆடுகிறேன். நீங்கள் நின்று நிதானமாக ஆடுங்கள்’ என்றேன். நான் ஆட்டமிழந்ததும் ராயுடு நிதானமாக ஆட, ரோகித் என்னிடமிருந்த அதிரடியை அவர் எடுத்துக்கொண்டார். இதுதான் எங்கள் ஆட்டமுறை. அதே நேரம் பார்ட்னர்ஷிப்பும் முக்கியம். நானும் ரோகித்தும் இணைந்து 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது, இது ஐந்து அல்லது ஆறாவது முறை என நினைக்கிறேன். அவருடன் பேட்டிங் செய்வது மகிழ்ச்சியானது.

 

(ரோகித் சர்மா)

நாங்கள் இப்படி பேட்டிங் செய்தால் ஸ்கோர் வேகமாக உயரும் என்பது தெரியும். எங்களின் பந்துவீச்சு பற்றி கேட்கிறார்கள். பந்துவீச்சாளர் களிடம் நான் கடுமைகாட்ட விரும்பவில்லை. வெஸ்ட் இண்டீஸ் மாதிரியான ஒரு அணியை கட்டுப்படுத்துவது கடினம். அதனால் அவர்களை குறை சொல்ல முடியாது. இருந்தாலும் கடைசி சில ஓவர்களில் சிறப்பாகவே பந்துவீசினார்கள். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் 42 வது ஓவரிலேயே ஸ்கோரை எட்டிப்பிடித்தோம்’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close