[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

“இனி நீ தான்ப்பு பாத்துக்கனும்” - பண்ட்க்கு தோனி கொடுத்த கேப்

rishabh-pant-receives-his-odi-cap-from-ms-dhoni

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் மற்றும் ரிஷப் பண்ட்க்கு முன்னாள் கேப்டன் தோனி தொப்பியை கொடுத்து வரவேற்றார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணியும் மோதவுள்ளன. 

இன்று கவுகாத்தியில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சந்த்ரபால் 9 (15) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கியெரன் பவெல் அரை சதம் 51 (39) அடித்து அவுட் ஆனார். மார்லான் சமுவேல்ஸ் 0 (2) என பூஜ்ஜியத்தில் அவுட் ஆனார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாய் ஹோப் 32 (51) ரன்கள் எடுத்த நிலையில் ஷமி வீசிய பந்தில் தோனியிடம் கேட் ஆனார். இதனால் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது அந்த அணி 27.2 ஓவர்களுக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் முகமது ஷமி 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

இந்தியாவின் இளம் வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த்க்கு இதுதான் முதல் ஒருநாள் போட்டி. இதனால் அவருக்கு மற்ற ஜீனியர் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவரை முதல் ஒருநாள் போட்டியில் வரவேற்கும் விதத்திலும், இனி வருங்கலாத்தில் தனக்கு பிறகு அவர்தான் கீப்பர் என்ற வகையிலும் தோனி ரிஷப் பண்ட்க்கு கேப்பை கொடுத்து வரவேற்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close