[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

மிடில் ஆர்டர் சிக்கல்: அம்பத்தி ராயுடுவுக்கு விராத் ஆதரவு!

virat-kohli-backs-ambati-rayudu-for-the-no-4-spot

நான்காவது வரிசையில் இறங்கி அம்பத்தி ராயுடு சிறப்பாக விளையாடுகிறார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கிறது. இதில் ரிஷாப் பன்ட் அறிமுக வீரராக களமிறங்குகிறார். 

(அம்பத்தி ராயுடு)

இந்தப் போட்டி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய விராத் கோலி கூறும்போது, ’இந்திய அணி சிறப்பான அணியாக இருக்கிறது. மிடில் வரிசையில் நான்காவது வரிசைக்கு சரியான நபரை தேர்ந்தெடுப்பதுதான் எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. பல வீரரை அந்த இடத்தில் விளையாட வைத்து சோதித்து பார்த்துவிட்டோம். யாரும் அந்த இடத்தில் நிலைத்து நின்று ஆடவில்லை. அம்பத்தி ராயுடுவை இங்கிலாந்து தொடரில் விளையாட வைத்து முயற்சி செய்ய நினைத்தோம். அப்போது அவரால் அந்த தொடரில் பங்கேற்க முடியவில்லை. (யோ யோ டெஸ்ட்டில் அப்போது ராயுடு தேர்வாகவில்லை).

ஆசியக் கோப்பையில் அவரை சோதனை செய்தோம். அவர் அந்த இடத்துக்கு பொருத்தமானவராக இருக்கிறார். அவர் அனுபவமிக்க வீரர். அவரிடம் சிறந்த ஒரு நாள் போட்டிக்கான ரெக்கார்ட் இருக்கிறது. உள்ளூர் போட்டிகளில் அவரது மாநிலத்துக்காக பல, போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். ஐபிஎல் போட்டியிலும் அபாரமாக ஆடியிருக்கிறார். அவர் நிலைத்து நின்று விளையாடி விட்டால், உலகக் கோப்பைக்கு நடுவரிசை பற்றிய கவலை இல்லாமல் போய்விடும்’ என்றார். 

அவரிடம் தோனியின் ஃபார்ம் பற்றி கேட்டபோது, ’விமர்சனம் செய்வது எளிது. தோனியைப் பொருத்தவரை அனுபவ வீரர். எந்த இடத்திலும் இறங்கி, தன்னை நிரூபித்து விளையாடக்கூடியவர். சூழ்நிலைக்கு ஏற்றார்போல், விளையாடும் வீரர்தான் முக்கியம். கடந்த சில போட்டிகளில் முதல் மூன்று பேட்ஸ்மேன்களே 40 ஓவர்கள் வரை நின்று பேட் செய்து விடுகிறார்கள். அதனால், நடுவரிசையிலும், பின்னால் களமிறங்கு பவர்களுக்கு சரியான வாய்ப்பு கொடுக்க முடியவில்லை’ என்றார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close