[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி

இன்று முதலாவது ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கும் விராத் கோலி!

india-vs-west-indies-first-one-day-starts-today

வெஸ்ட் இண்டீஸ்- இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கிறது.

இந்திய அணியில் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ரிஷாப் பன்ட், பேட்ஸ்மேனாக அறிமுகமாகிறார். தவான், ரோகித், விராத் கோலி ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். மிடில் வரிசை இந்திய அணிக்கு இன்னும் சிக்கலாகவே இருக்கிறது. உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் மிடில் வரிசையை பலப்படுத்த வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது. அதற்கு இந்த தொடர் உதவும்.

மூத்த வீரர் தோனி, ஆசிய கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மைதானத்துக்குள் இறங்குவதும் பெவிலியன் திரும்புவதாகவும் இருக்கிறார் என்று அவர் மீது புகார் கூறப்படுகிறது. இருந்தாலும் அவரது அனுபவம் முக்கியம் என இந்திய அணி கருதுவாதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணி இன்னும் சாதிக்க வாய்ப்பிருக்கிறது. பந்து வீச்சில் முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, குல்தீப், சேஹல் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

ஹோல்ட தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இளம் வீரர்களை கொண்ட அணியாக இருக்கிறது. முன்னணி வீரர்கள் இல்லாததால் அந்த அணி பலவீனமாக தெரிகிறது. அனுபவ வீரராக சாமுவேல்ஸ் மட்டுமே இருக்கிறார். இருந்தாலும் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் பந்துவீச்சில் மிரட்டுவார்கள்.

இந்த தொடரில் கேப்டன் கோலி, 221 ரன்கள் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெறுவார். 187 ரன்கள் எடுத்தால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைப்பார். 

பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி விவரம்:

விராத் கோலி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, , அம்பத்தி ராயுடு, ரிஷாப் பன்ட், தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சேஹல், உமேஷ் யாதவ், முகமது ஷமி அல்லது கலீல் அகமது.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close