[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

ரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்? 

watch-fan-invades-pitch-tries-to-kiss-rohit-sharma-during-vijay-hazare-trophy-match

ரோகித் ஷர்மாவிற்கு ரசிகர் ஒருவர் முத்தம் அளித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் பாரம்பரியமான கபடி போன்ற விளையாட்டுகளை காட்டிலும் கிரிக்கெட்டின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு கிராமங்களிலும், நகரத்திலும் கிரிக்கெட் விளையாடாத இளைஞர்களே இல்லை என்று சொல்லலாம். கிரிக்கெட்டின் மீது இந்திய இளைஞர்கள் அவ்வளவு வெறித்தனமான பற்று வைத்திருக்கிறார்கள். இளைஞர்கள் தங்கள் அறைகளில் நடிகர், நடிகைகளின் படங்கள் இருக்கும் அளவிற்கு கிரிக்கெட் வீரர்கள் படம் நிச்சயம் இருக்கும். சில கிரிக்கெட் வீரர்கள் மீது ரசிகர்கள் பைத்தியமாக இருப்பார்கள். 

      

சச்சின் இருந்தவரை அவர் மீது ரசிகர்கள் மிகவும் வெறித்தனமாக அன்பு வைத்திருந்தார். இப்பொழுது, மகேந்திர சிங் தோனி, விராட் கோலிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். எவ்வளவுதான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தாலும், ஒரே ஒரு ஸ்டம்பிங்கில் அத்தனை புகழையும் அள்ளி செல்கிறார் தோனி. தங்களது ஆஸ்தான வீரர்கள் மீது கட்டுப்பாடை மீறி அன்பினை காட்டிவிடுகிறார்கள். 

        

சில ரசிகர்கள் தங்களின் அன்பினை வீரர்களிடம் நாகரீகமாக வெளிப்படுத்துவார்கள். வீரர்களை நேரில் பார்க்கும் போது ஆட்டோ கிராப் வாங்குவது, மைதானங்களில் தனக்கு பிடித்த வீரர்களின் படங்களை உடலில் வரைந்து வைத்து காட்டுவது, பச்சை குத்துவது என பல வகைகளில் பாசத்தை காட்டுவார்கள். ஆனால், சிலர் எல்லையை தாண்டி மைதானங்களில் நுழைந்து வீரர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி வருவார்கள். சமீப காலங்களில் தோனி, விராட் கோலியை மைதானங்களுக்குள் நுழைந்து அவரது ரசிகர்கள் பார்த்தனர். 

        

இந்நிலையில், விஜய் ஹசாரே போட்டியின் போது, மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மாவை அவரது ரசிகர் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலங்களில்  பல முறை நடந்திருந்தாலும், இதுசற்றே அநாகரிகமாக தெரிகிறது. மைதானத்திற்குள் ஓடி வந்த அந்த ரசிகர் முதலில் ரோகித் சர்மாவின் காலில் விழுந்துள்ளார். அதோடு, அவர் சென்றிருந்தால் பரவாயில்லை. ரோகித்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். ரோகித் சர்மா சற்றே விலகவே மீண்டும் கட்டிப் பிடித்து முத்தக் கொடுக்க முயன்றுள்ளார்.

         

பின்னர், அங்கிருந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தவாறே அந்த ரசிகர் மைதானத்திற்கு வெளியே ஓடியுள்ளார். ரோகித் சர்மாவிற்கு ரசிகர் முத்தம் அளித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close