[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

கிறிஸ் கெய்ல் முன் ஒரே ஓவரில் 6 சிக்சர்: ஆப்கான் வீரர் மிரட்டல்!

hazratullah-zazai-smashes-six-sixes-in-an-over-in-front-of-gayle

அதிரடி வீரர் கிறிஸ் கெயிலின் முன், ஒரே ஓவரில் ஆறு சிக்சர் அடித்து மிரட்டினார் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர்.

இந்தியாவில் ஐபிஎல் போல, ஆப்கானிஸ்தானில் ஏபிஎல் என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் பிரிமிரீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாட்டு வீரர்கள் பங்கேற்று ஆடி வருகின்றனர். 

சார்ஜாவில் நேற்று நடந்தபோட்டியில் காபுல் ஸ்வானன் அணியும் பால்க் லெஜண்ட்ஸ் அணியும் மோதின. அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் பங்கேற்றிருந்த பால்க் லெஜண்ட் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில்  6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.

பின்னர் காபுல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக ரோஞ்சியும் ஹஸ்ரத்துல்லா சஸாயும் களமிறங்கி னர்.   நான்காவது ஓவரை அப்துல்லா மஸாரி வீசினார். அந்த ஓவரின் 6 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்தினார்  ஹஸ்ரத்துல்லா சஸாய். அவர் 17 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைக் கண்டு கிறிஸ் கெய்ல் உட்பட எதிரணி வீரர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். 

பின்னர் சஸாய் கூறும்போது, ‘கிறிஸ் கெய்ல்தான் எனது ஆதர்சமான வீரர். அவர் முன்னால் இப்படி நான் ஆடியது எனக்கே கனவாகத்தான் இருக்கிறது. வழக்கமான எனது ஆட்டத்தை ஆடினேன். இதில் நான் சில சாதனைகளை செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். இதன்மூலம் என் பெயரும் கிரிக்கெட்டில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.

இவர் இப்படி சிக்சராக அடித்திருந்தாலும் அந்த அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் பால்க் லெஜண்ட் வெற்றி பெற்றது.

இதற்கு முன், கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி, கிப்ஸ், யுவராஜ் சிங், ரோஸ் வொயிட்லி ஆகியோர் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்க ளை அடித்துள்ளனர்.

அதே போல மிகக் குறைந்த பந்துகளில் (12) அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் சஸாரியும் இணைந்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close