[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்
  • BREAKING-NEWS பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்

2-வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி முன்னிலை

pant-rahane-shore-india-up-from-precarious-position

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில், 311 குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் ரோஸ்டன் சேஸ் 106, ஹோல்டர் 52 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட் சாய்த்தார்.

பின்னர், இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. கே.எல்.ராகுல் 4, புஜாரா 10 ரன்னில் ஆட்டமிழந்தனர். பிருத்வி ஷா, ஒரு சிக்ஸர் 11 பவுண்டரிகளுடன் 53 பந்தில் 70 ரன் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் விராத் கோலி 45 ரன் எடுத்து அவுட் ஆனார்.  அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்திருந்தது. அதன்பிறகு ரஹானே, ரிஷப் பன்ட் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பண்ட் 67 பந்திலும், ரஹானே 122 பந்திலும் அரைசதம் அடித்தனர்.

இந்திய அணி இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்திருந்தது. ரஹானே 75, ரிஷப் பன்ட் 85 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். 

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. சிறப்பாக விளையாடிய ரஹானே, 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹோல்டர் பந்துவீச்சில் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து, கடந்த டெஸ்ட்டில் சதம் அடித்த ஜடேஜா, ரிஷப்புடன் சேர்ந்தார். ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே  ஹோல்டர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார் ஜடேஜா . அடுத்து அஸ்வின் வந்தார்.

இதற்கிடையே சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பன்ட்,   கேப்ரியல் பந்தில் ஹெட்மையரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து குல்தீப் யாதவும் அஸ்வினும் ஆடி வருகின்றனர். காலை 10.15 மணி நிலவரப்படி இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close