[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

அசத்தினார் மலிங்கா: இலங்கைக்கு 279 ரன் இலக்கு வைத்தது இங்கிலாந்து!

malinga-five-fer-keeps-england-down-to-278-9

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்துள் ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட அங்கு சென்றுள்ளது. இந்த இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த அணிகள் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடர்ந்தது. இலங்கை அணியின் அனுபவ பந்துவீச்சாளர் மலிங்கா அபாரமாக பந்துவீசினார். இருந்தும் இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 278 ரன் எடுத்தது. அந்த அணியின் ஜோ ரூட் 71 ரன்களும் கேப்டன் மோர்கன் 92 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் மலிங்கா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close