[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை

விரைவில் தமிழகத்துக்கும் ஒரு மேரி கோம் !

the-us-consulate-in-chennai-has-organized-a-special-training-program-for-boxing-trainers

சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம், குத்துச்சண்டை பயிற்சியாளர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பரிமாற்றத் திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி தமிழகம், கர்நடகம், கேரளம் மற்றும் புதுவையிலிருந்து 5 ஆண் பயிற்சியாளர்களும் 5 பெண் பயிற்சியாளர்களும் என மொத்தம் 10 பேர் அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளனர். இந்த ஆண்டு அக்டோபர் 27 முதல் நவம்பர் 10 வரை மொத்தம் 15 நாட்களுக்கு இப்பயணம் நீடிக்கும். அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள குத்துச்சண்டை பயிற்சியாளர்களிடம் விளையாட்டு நுணுக்கங்களை பகிர்ந்துகொள்வர். இதற்காக தமிழகத்திலிருந்து, 1995-ல் அர்ஜுனா விருது பெற்ற, முன்னாள் குத்துச்சண்டை வீரர் வி. தேவராஜன், குத்துச்சண்டை பயிற்சியாளர்கள் துர்காதேவி, சதீஷ் குமார், அகிலாண்டேஸ்வரி, நர்மதா ஆகியோர் தெர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களோடு புதுச்சேரியிலிருந்து மதன்குமார், கர்நாடகாவின் ரவிந்த்ரா குந்தபுரா, தீபிகா ஆகியோரும் செல்கின்றனர். மேலும் கேரளாவிலிருந்து லேகா கோழும்மெல் மற்றும் சாஜேஷ் சிகாமணி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்த சிறப்புப் பயிற்சிப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் தென் இந்தியாவிலிருந்து பயிற்சியாளர்கள் செல்வது இதுவே முதன்முறை. குத்துச்சண்டை விளையாட்டு மேம்பாட்டையும் தாண்டி பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரு முயற்சியாக இத்திட்டம் வகுக்கப்பட்டதாக அமெரிக்க துணைத் தூதரகத்தின் ஊடக அதிகாரி கேத்லீன் தெரிவித்தார்.

இப்பயணத்தை மேற்கொள்ளும் பயிற்சியாளர்கள் குத்துச்சண்டையை ஒரு தற்காப்பு கலையாக கருதுகின்றனர். இவர்களில் சிலர் பொருளாதாரத்தில் பின் தங்கிய சிறுமிகளுக்கும் இளம் பெண்களுக்கும் இலவசமாக குத்துச்சண்டையை பயிற்றுவிக்கின்றனர். மேலும் சிலர் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கிராமகங்கள் தோரும் குத்துச்சண்டையில் மாணவர்களுக்கு ஆர்வமூட்ட பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். 

அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் வீரர் தேவராஜன் பேசும்போது, மகளிருக்கான குத்துச்சண்டை என்றவுடன் ”மேரி கோம் என்ற ஒரு வீராங்கனையும், வட கிழக்கு மாநிலங்களும் மட்டுமே நினைவுக்கு வரும் நிலையை மாற்ற  வேண்டும். தமிழகத்தில் திறமைமிக்க பல இளம் பெண்கள் உள்ளனர். அவர்களை மிளிரவைக்க இந்த பயிற்சிப் பரிமாற்றம் உதவும்” என்றார். விளையாட்டாக மட்டுமில்லாமல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் குத்துச்சண்டை பயிற்சி, பெண்களுக்கு பல புதிய தளங்களை அமைத்துத் தரும் என்பதே பயணக்குழுவின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close