[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்

கோலியா கொக்கா..! - சத்தமின்றி சதம் அடிச்ச விராத்

indvswi-1st-test-virat-kohli-hit-century

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதமடித்துள்ளார்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இளம் வீரரும், அறிமுக வீரருமான பிருத்வி ஷா சதம் அடித்து சாதனை படைத்தார். பின்னர் 134 (154) அவர் ஆட்டமிழந்தார். புஜாரா 86 (130) எடுத்தார். நேற்றைய நேர ஆட்ட முடிவில் கோலி களத்தில் இருக்க, இந்திய 364 ரன்கள் குவித்திருந்தது. 

இந்நிலையில் இன்றைய ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய அணி வேகமாக ரன் குவிக்க தொடங்கியது. ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 84 பந்துகளில் அவர் 92 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் நிலைத்து விளையாடி கோலி சதம் அடித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இது விராத் கோலியின் 24வது சதமாகும். உணவு இடைவேளையின் போது  இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் எடுத்துள்ளது. விரைவில் இந்தியா டிக்ளர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close