[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

முதல் முறையாக புதுமை செய்த இந்திய கிரிக்கெட் அணி!

it-s-first-india-decide-to-name-12-on-test-eve

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடக்க இருக்கின்றன. இதன்படி முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் புதுமை ஒன்றை செய்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு முன்பாகத் தான் ஆடும் இந்திய லெவன் அணி தெரிய வரும். யாரை சேர்ப்பார்கள், யாரை நீக்குவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஆட்டம் தொடங்கும் வரை இருக்கும். ஆனால், அதை உடைத்திருக்கிறார்கள் இப்போது.

கேப்டன் விராத் கோலி, போட்டி பற்றி நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிறகு உடனடியாக 12 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அணி நிர்வாகம் வெளியிட்டது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்படி வெளியிடுவது இதுதான் முதன்முறையாம்! இதில் மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, முகமது சிராஜ் நீக்கப்பட்டுள்ளனர். பிருத்வி ஷா தொடக்க வீரராக அறிமுகமாகிறார்.

இந்திய அணி விவரம்:
கே.எல்.ராகுல், பிருத்வி ஷா, புஜாரா, விராத் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பன்ட், அஸ்வின், ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் அல்லது ஷர்துல் தாகூர்.

இதுபற்றி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது, ‘புதிய முயற்சியாக இதை செய்துள்ளோம்’ என்றார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close