[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் பிரச்னை: துபாயில் ஐசிசி குழு விசாரணை!

bcci-pcb-go-head-to-head-in-legal-battle

இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து எழுந்துள்ள பிரச்னை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தகராறுகள் தீர்ப்பாயத்தின் விசாரணை தொடங்கியுள்ளது.

2008 ஆம் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மட்டும் இணைந்து முழு தொடரில் விளையாடவில்லை. இருந்தாலும் மற்ற சர்வதேச தொடர்களில் இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரு அணிகளும் 24 போட்டிகளில் விளையாட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்தப் போட்டிகள் நடத்தப்படாததால் பாகிஸ்தான் அணிக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

இதையடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் மீறிவிட்டதாகவும் இதன் காரணமாக 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 500 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நோட்டிஸ் அனுப்பியது. பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிலும் புகார் செய்தது.

இந்நிலையில் இந்தப் பிரச்னை பற்றி பேசி முடிவெடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (Dispute Resolutions Committee) தகராறுகள் தீர்ப்பாயம் முடிவு செய்தது. அதன்படி அதன் தலைவர், மைக்கேல் பிளாஃப் தலைமையில் ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோரை கொண்ட குழு துபாயில் நேற்று விசாரணையை தொடங்கியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close