[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்

'தோனியை இனியும் நம்பாதீங்க' ரசிகர்களுக்கு சஞ்ஜய் மஞ்சரேக்கர் அட்வைஸ்

ms-dhoni-no-more-a-world-beater-tone-down-expectations-from-him-as-a-batsman-sanjay-manjrekar

இந்திய அணியில் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். நீண்ட காலம் கேப்டனாக இருந்த தோனி 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்தும், கடந்த ஆண்டு 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். தன்னுடைய கேப்டன் பொறுப்பை அவர் விராட் கோலியிடம் ஒப்படைத்தார். 

Read Also -> சந்திராயன் 2 திட்டம்: 70 விஞ்ஞானிகள் ஆலோசனை ! 

விராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த போது, களத்திலும் பயிற்சியின் போதும் அவர் இரண்டாவது கேப்டனாகவே செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இப்பொழுது விளையாடி வருகிறார். இந்தப் போட்டிகளின் போது இக்கட்டான நேரங்களில் விராட் கோலிக்கு தோனி ஆலோசனை கூறுவார். அதற்கு நல்ல பலன்களும் கிடைக்கும். 

Read Also -> பிரபல நடிகர் ராஜ்கபூர் மனைவி மரணம்

இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் தோனி தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவரது பேட்டிங் திறன் குறித்து பரவலாக பேசப்பட்டது. இதனையடுத்து இப்போது நடந்து முடிந்த ஆசியக் கோப்பை போட்டியிலும் தோனி பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தோனி அதன் பின் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் தோனியின் பேட்டிங் ஃபார்ம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

Read Also -> எஸ்பிஐ ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறீர்களா. .? இதனை மறக்காமல் படியுங்கள்..!

தோனியின் பேட்டிங் சொதப்பல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்ஜய் மஞ்சரேக்கர் விமர்சித்துள்ளார், அதில் "தோனி இப்போது மிகச் சிறந்த உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக தெரியவில்லை. கேதர் ஜாதவ் ஆசியக் கோப்பையில் நல்ல ஃபார்மில் இருந்தார். அவரை தோனிக்கு முன்னதாக களமிறக்கி இருக்க வேண்டும். ஆனால் தோனியை கேதாருக்கு முன்னதாக பேட்டிங் செய்ய அனுப்பி சொதப்பியுள்ளனர். தோனி இப்போதிருக்கும் நிலையில் அவர் பேட்டிங் வரிசையில் கீழயே விளையாட வேண்டும். மேலும் ரசிகர்கள் தோனி மீதான எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ள வேண்டும். இனியும் தோனி சிறப்பாக பேட்டிங் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை" என பதிவு செய்துள்ளார் சஞ்ஜய் மஞ்சரேக்கர்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில் " ஒரு கீப்பராக தோனி தொடர்ந்து சிறப்பாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 2019 ஆம் ஆண்டு உலக்க கோப்பைக்கு இந்திய அணி கோலி தலைமையில் செல்ல இருக்கிறது. கோலிக்கு பக்கபலமாக அனுபவம் வாய்ந்த தோனி உடன் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தோனியின் பேட்டிங் தொடர்ந்து கவலையளிக்கிறது. இது அணிக்கு பின்னடைவாக அமைந்திடும். தோனிக்கு பதிலாக வேற ஒரு வீரர் சாய்ஸில் இருந்தால் அதனை பிசிசிஐ பரிசீலிக்க வேண்டும்" என சஞ்ஜய் மஞ்சரேக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close