[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பங்களாதேஷ் அணியை புகழ்ந்த ரோகித் சர்மா

bangladesh-put-us-under-pressure-in-the-first-10-over-rohit-sharma

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், பங்களாதேஷ் அணி கடுமையாக நெருக்கடி தந்து சிறப்பாக விளையாடியது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.
14-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்றன. 6 அணிகளில், 4 அணிகள் மட்டும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்ற தால் இலங்கை மற்றும் ஹாங்காங் அணிகள் வெளியேறின. தொடர்ந்து நடைபெற்ற ‘சூப்பர் 4’ சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணி கள் வெளியேறின. இறுதிப் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் நேற்று மோதின.  

துபாயில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி, 222 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக் காரர் லிட்டன் தாஸ் அபார சதமடித்தார்.

இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி போராடி, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆசியக் கோப்பையை ஏழாவது முறையாக இந்திய அணி வென்றது.

வெற்றிக்குப் பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, ‘நாங்கள் இந்த தொடர் முழுவதும் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்ப டுத்தினோம். அதற்கான பரிசாக கோப்பை கிடைத்துள்ளது. இந்த தொடர் முழுவதும் எங்கள் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதற்கு அணியின் அனைத்து வீரர்களுக்கும் பங்கு இருக்கிறது. இன்று (நேற்று) நடந்தப் போட்டியில் நடுவரிசை வீரர்கள் அழுத்தமான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடி யது முக்கியம். அவர்கள் ஆட்டத்தை முடித்த விதம் அருமையானது. அதோடு பங்களாதேஷ் அணியையும் பாராட்டியே ஆக வேண்டும். அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். முதல் 10 ஓவரில் கடுமையான நெருக்கடி கொடுத்தார்கள். அழுத்தத்தைக் கொடுத்தார்கள். கிரிக்கெட்டில் அது முக்கியம். இருந்தாலும் பந்து பழசாகிவிட்டால் எல்லாம் மாறும் என்று  தெரியும். அணியின் மற்ற வீரர்கள் ஆதரவு இல்லாமல் கோப்பையை வென்றிருக்க முடியாது. எல்லா பெருமையும் அவர்களைச் சேரும். இங்கு வந்திருந்த பார்வையாளர்களும் எங்களுக்கு சிறப்பான ஆதரவை அளித்தார்கள். அவர்களுக்கும் நன்றி’  என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close