[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மின்னலை விட வேகமான தோனி ஸ்டம்பிங் - ‘.16’ செகண்ட்தான்

twitter-lauds-ms-dhoni-s-lightning-quick-stumping-to-send-back-liton-das

இந்திய அணியில் தோனி ஏன் இன்னும் நீடிக்கிறார் என்ற கேள்வி அவ்வவ்போது எழும். அப்படிப்பட்ட கேள்விகளுக்கு இன்றைய போட்டியில் தன்னுடைய திறமையால் தோனி பதில் அளித்துள்ளார். கேப்டன்ஷிப்பில் பல்வேறு புதிய சாதனைகளை படைத்த தோனி, தான் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் என்பதையும் இன்றளவும் நிரூபித்து வருகிறார். ஸ்டம்பிற்கு பின்னாள் இருக்கும் அவர் இரண்டு முக்கியமான விஷயங்களுக்கு ஸ்பெஷல். ஒன்று டிஆர்எஸ் என்றும் ரிவிவ் கேட்பதற்கு. மற்றொரு மின்னல் வேக ஸ்டம்பிங். 

      

இன்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனி இரண்டு ஸ்டம்பிங் மற்றும் ஒரு ரன் அவுட் செய்தார். அதில், 41வது ஓவரின் கடைசி பந்தில் லிடன் தாஸை தோனி செய்த ஸ்டம்பிங் ரசிகர்கள்களை வியக்க வைத்துவிட்டது. சதம் விளாசி இந்திய அணி நெருக்கடி கொடுத்து கொண்டு இருந்தவர் லிடன். கடைசி வரை அவர் களத்தில் இருந்திருந்தால் நிச்சயம் வங்கதேசம் 250 ரன்களை கடந்து இருக்கும்.

       

ஆனால், லிடன் அசந்த நேரத்தில் தோனி ஸ்டம்பிங் செய்துவிட்டார். மிகவும் துல்லியமான நூலிழையில் அவுட் ஆனார் லிடன். மூன்றாவது அம்பயரை நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு தான் அவுட் என்பதை அறிவித்தார். தோனி 0.16 செகண்ட் வேகத்தில் ஸ்டம்பிங் செய்துள்ளார். 

இந்த ஸ்டம்பிங்கை சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வழக்கம் போல் புகழ்ந்து தள்ளி உள்ளனர். ஸ்டம்பிங் செய்யப்பட்ட படத்தை பலரும் பதிவிட்டுள்ளார். 

                    

சில கமெண்ட்கள்:-

  • தோனியை விட மின்னல் வேகமானது இல்லை
  • தோனி அவுட் கொடுத்த பின்னர் மூன்றாவது நடுவர் இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது
  • எது வேகமானது 1) மின்னல் 2) சத்தம் 3) எலக்ட்ரோ மேக்னடிக் வேவ்ஸ் 4) தோனியின் ஸ்டம்பிங்
  • தோனி எல்லையில் நிறுத்தப்பட வேண்டும் அப்பொழுதுதான் வங்கதேசத்தில் ஊடுருவி வரமாட்டார்கள்
  • எச்சரிக்கை - தோனி ஸ்டம்பிற்கு பின்னால் இருக்கும் போது கோட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்

போட்டோ கேலரி

1 of 7

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close