[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

ஆசியக் கோப்பையில் சொதப்பல்: பாகிஸ்தான் வீரர் முகமது ஆமீர் நீக்கம்!

mohammad-amir-dropped-for-two-test-series-against-australia

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஆமிர். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவ காரணமாக இருந்தவர் இவர். தொடர்ந்து அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்குப் பிறகு ஒரு நாள் தொடர்களில் அவர் அதிகம் விக்கெட் வீழ்த்தவில்லை. அவர் விளையாடிய கடந்த ஐந்து ஒரு நாள் போட்டிகளில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இதனால் அவர் மீது பாகிஸ்தான் அணி நிர்வாகம் நம்பிக்கையை இழந்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான அணி, அறி விக்கப்பட்டுள்ளது. இதில் முகமது ஆமீரின் பெயர் இடம்பெறவில்லை. மோசமான ஃபார்ம் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close