[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

'ஒழுங்கா பவுலிங் போடு இல்ல பவுலரா மாத்திடுவேன்' கலாய்த்த தோனி

captain-ms-dhoni-s-hilarious-warning-for-kuldeep-yadav-on-field

ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்றன. 6 அணிகளில் 4 அணிகள் மட்டும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றதால் இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய இரு அணிகள் வெளியேறிவிட்டன. இந்நிலையில் நேற்று இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு கோப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். இது தோனி கேப்டனாக பங்கேற்கும் 200 ஆவது போட்டியாகும். ஆனால் நேற்றைய இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி "டை"யில் முடிவடைந்தது.

நேற்றையப் போட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் அணியின் பாகுபலி முகமது ஷசாத் சதம் விளாசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சம் 5 சதம் அடித்த ஒரே வீரர் முகமது ஷசாத் மட்டுமே. இந்திய அணி தரப்பில் நேற்று சுழற்பந்து வீச்சாளர்கள்தான் விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதில் குல்தீப் யாதவ்வும் முக்கியமானவர். குல்தீப் யாதவ் நேற்றைய போட்டியில் 10 ஓவர்கள் வீசி 38 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

அப்போது ஒரு சம்பவம் நடைபெற்றது, குல்தீப் யாதல் சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருந்தார். அவரின் பந்து வீச்சுக்கு ஏற்றார்போல தோனி பீல்டர்களையும் நிற்கவைத்தார். ஆனால், குல்தீப் மீண்டும் மீண்டும் பீல்டர்களை இப்படி வேணும் அப்படி வேணும் என மாற்ற சொல்லிக்கொண்டே இருந்தார். அப்போது தோனி இந்தியில் "Bowling karega ya bowler change karein" என கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இதற்கு அர்த்தம் "பவுலிங் போடப்பா இல்ல பவுலரை மாத்திடுவேன்". இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி எல்லோராலும் கேப்டன் கூல் என்று அன்போடு அழைக்கப்படுபவர். நீண்ட நாட்களாக தனது கேப்டன் பொறுப்பில் அவர் நடந்து கொண்ட விதத்திற்காகவே அவர் இவ்வாறு அறியப்படுகிறார். வெற்றி, தோல்வி என இரண்டு தருணங்களிலும் அலட்டிக் கொள்ளாத தோனி பண்புக்கு அத்தனை ரசிகர்கள் உள்ளார்கள். ஆனாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தருணங்களில் மட்டும் அவரது கோப முகத்தை வெளிக்காட்டுவார்.

அப்படியான ஒரு தருணத்தை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஏற்கெனவே பகிர்ந்து கொண்டார். கடந்த ஆண்டு இந்தூர் நகரில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தோனியின் கோபத்தை பார்த்ததாக குல்தீப் சிலிர்ப்புடன் கூறினார். அப்போதும் இதே பீல்டிங்கள் வீரர்களை நிற்க வைப்பதில் பிரச்சனை. அப்போது குல்தீப்பிடம் சென்ற தோனி "‘என்னை பைத்தியக்காரன் என்று நினைக்கிறீர்கள். 300 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறேன்’ என்று கூறினார்.

அவ்வளவு தான் நான் அதிர்ந்து போனேன் என்றார் குல்தீப். தோனி பீல்டிங் மாற்றம் செய்த பின்னர் ஒரு விக்கெட் வீழ்ந்தது. பின்னர், என்னிடம் வந்து இதற்காகத்தான் அப்படி கூறினேன் என்றார் தோனி” என்றார். ஆக மொத்தம் நமக்கு தெரிஞ்சு தோனியிடம் குல்தீப் "பல்பு" வாங்குவது இரண்டாவது முறை. நமக்கு தெரியாம எத்தனை முறையோ !

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close